School Leave: முரசு புயலால் கொட்டும் கனமழை.. கடலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட நிர்வாகம்
கடலூர்: கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று செவ்வாய்க்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முரசு புயல் கரையை கடந்த நிலையில் கடலூர் பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான முரசு புயல் இன்று அதிகாலை தீவிர புயலாக கரையை கடந்து. ஆந்திராவின் நெல்லூர் - நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே புயல் கரையை கடந்தது. 120 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசியது. ஆந்திரா மட்டுமின்றி தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் கனமழை கொட்டியது.

கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை
குறிப்பாக நேற்று சென்னை, திருவள்ளூரில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. கடலூர் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து கனமழை கொட்டி வந்தது. சென்னை வானிலை ஆய்வு மையமும் இன்று வட தமிழகத்தில் ஒருசில இடங்களில், புதுவை, காரைக்காலில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தான் கனமழை மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை, உள் தமிழக மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. என்று கூறப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications
