சின்ன குழந்தைனு கூட பார்க்காம! 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபர் வீட்டின் மீது கல் வீச்சு
கடலூர்: கடலூரில் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் கொதித்தெழுந்த கிராம மக்கள் குற்றம்சாட்டப்பட்ட நபரின் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள வாகையூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்கிற செந்தாமரை (43). இவர் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் கூறினார். பின்னர் திடீரென வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். உடனே பெற்றோரும், உறவினர்களும் அந்த சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து புகாரின் பேரில் செந்திலை போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று முன் தினம் இறந்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து கைதான செந்திலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பெண்கள் திட்டக்குடி- ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் வாகையூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த ராமநத்தம் போலீஸார் மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் தற்போது கலைந்து செல்லுமாறும் கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் ஒரு மண நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் ஆத்திரமடைந்த உறவினர்கள் செந்திலின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை தடுத்து கலைந்து போக செய்தனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications