புதைக்கவில்லை..விதைத்திருக்கிறேன்! என் மகள் மரணத்திற்கு காரணமானவர்களை வேரறுப்பாள்! தந்தை ஆவேச பேச்சு
கடலூர் : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் என் மகளை புதைக்கவில்லை விதைத்திருக்கிறேன் அவள் மரமாக வளர்ந்து மரணத்திற்கு காரணமானவர்களை வேரறுப்பாள் என மாணவியின் தந்தை ஆவேசமாக கூறியுள்ளார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியமூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பள்ளியில் வன்முறை வெடித்தது.
வன்முறை தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பள்ளியில் இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 302 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மாணவி மரணம்
மாணவி மரணம் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அந்த பள்ளியின் தாளாளர் முதல்வர் செயலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை அடுத்து கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 3 நாட்களாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

பெற்றோர் ஒப்புதல்
இதனிடையே மாணவி மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, "நாளை (23.07.20220 காலை 11 மணிக்குள் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மாணவியின் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மாணவியின் உடலை நாளை பெற்றுக் கொள்வதாக உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் ஒப்புதல் அளித்தனர்.

உடல் அடக்கம்
இதையடுத்து அவரது உடல் இன்று அவரது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர் காவல்துறையினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நிலையில் தொடர்ந்து அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான பெரியநெசலூருக்கு கொண்டு செல்லப்பட்டது மாணவியின் உடலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அவரது உடல், அந்த ஊரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

விதைத்திருக்கின்றேன்
மகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தந்தை," எனது மகளின் சாவுக்கு நீதி கேட்டு போராடினேன். அரசு அதைக் கூர்ந்து கவனித்து நீதி கிடைக்கச் செய்யும் என்று நம்புகிறேன். உலகத்தில் எந்த பெண்ணுக்கும் எனது மகளுக்கு நடந்த சம்பவம் போல் யாருக்கும் நடக்கக்கூடாது. நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கின்றேன். அவள் மரமாக வளர்ந்து இதற்கு காரணமானவர்களை வேரறுப்பாள்;: என பேசினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications