வடலூர் ஆட்டுச்சந்தையில் ஆடு விற்பனை ரூ.1 கோடியிலிருந்து ரூ.4 கோடியாக உயர்வு.. என்ன ஸ்பெஷல்?

Subscribe to Oneindia Tamil

கடலூர்: தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால் ஆட்டுச்சந்தைகளில் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், கடலூர் மாவட்டம் வடலூரில் அதிகாலை முதலே ஆடுகளை வாங்கவும் விற்கவும் வியாபாரிகள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகளால் சந்தையே களைகட்டியது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ஒரே நாளில் இங்கு நடந்த வியாபாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கடலூர் மாவட்டம் வடலூரில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு வடலூர் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

Vadalur Market News Tamil Nadu Goat Market Diwali 2026

வடலூர் ஆட்டுச்சந்தை

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சந்தையில் அதிகாலை 2 மணி முதலே ஆடுகள் விற்பனைக்காக வரத் தொடங்கின. வடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, புவனகிரி, கம்மாபுரம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

வெள்ளாடுகள், கொடி ஆடுகள், செம்மறி ஆடுகள் என பல்வேறு ரக ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆடுகளை வாங்குவதற்காக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை, திருவண்ணாமலை, சேலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இறைச்சிக் கடை உரிமையாளர்களும் அதிக அளவில் வந்திருந்தனர்.

குவிந்த ஆட்டு வியாபாரிகள்

இதனால் அதிகாலை முதலே சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆடுகளின் எடை, ரகம் மற்றும் தரத்தைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டது. குறைந்தபட்சம் ரூ.6,000 முதல் அதிகபட்சம் ரூ.35,000 வரை ஒரு ஆடு விற்பனையானது.

வியாபாரிகள் போட்டிப்போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றார்கள்.. இதனால் சந்தையில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ஒரே நாளில் ரூ.4 கோடி

இந்த சந்தையில் ஒரே நாளில் சுமார் 1,500 ஆடுகள் வரை விற்பனையானதாக சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.4 கோடி வரை வியாபாரம் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது வடலூர் ஆட்டுச்சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கு மேல் மட்டுமே வியாபாரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு விற்பனை ரூ.4 கோடியை எட்டியுள்ளது. இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வியாபாரம் கணிசமாக அதிகரித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடுகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வடலூர் ஆட்டுச்சந்தையில் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு வியாபாரம் நடைபெற்றிருப்பது அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது. கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+