லட்சுமணனுடன் செம்ம காதல்.. இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.. வெட்க புன்னகையுடன் திருநங்கை அமிர்தா
திருநங்கையை கடலூர் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ளார்
கடலூர்: பார்க்காமலே காதல், கண்டம் விட்டு கண்டம் பாயுற காதல், ஆகாசத்துல காதல், கடலுக்கு அடியில காதல்.. அப்படியெல்லாம் இல்லை இது.. பார்த்துதான் காதல்.. திருநங்கை என்று தெரிந்தும்தான் காதல்.. இந்த காதல் இப்போது கல்யாணத்தில் சுபமாக முடிந்துள்ளது!
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் சாலைக்கரையை சேர்ந்த தம்பதி சேகர்- அமுதா. இவர்களுடைய மகள் அமிர்தா. திருநங்கையான இவருக்கு வயசு 22 ஆகிறது.
சின்னசேலத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற 27 வயது இளைஞருடன் இவருக்கு ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானார். அறிமுகம் நட்பு ஆனது.. நட்பு, காதலானது.

சமாதானம்
சினிமாவுக்கு செட் போடும் தொழிலாளிதான் இந்த லட்சுமணன். மும்பையில் வேலை பார்த்து வருகிறார். அமிர்தாவை காதலிப்பதை வீட்டில் சொல்லவும், வழக்கம்போல் எதிர்ப்புதான் கிளம்பியது. அதற்காக பெற்றோரை எதிர்த்து கொள்ள லட்சுமணன் விரும்பவில்லை, மாறாக சமாதானம் செய்தார்.. தன் காதலை பெற்றோரிடம் புரிய வைத்தார். இதற்குபிறகுதான் அனுமதி தந்தனர் பெற்றோர்.

கல்யாணம்
இந்த நிலையில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் திருநங்கை அமிர்தாவுக்கும் லட்சுமணனுக்கும் பெற்றோர் முன்னிலையில் கல்யாணம் நடந்தது. கோயிலுக்கு வந்தவர்கள் எல்லாருமே இந்த கல்யாணத்தை நின்று ஆச்சரியமாக பார்த்து நகர்ந்து சென்றனர்.

மும்பை
கல்யாண பெண் அமிர்தா இதை பற்றி சொல்லும்போது, "நான் பிஎஸ்சி முடிச்சிட்டு விஏஓ தேர்வுக்காக படிச்சிட்டு இருக்கேன். இன்னொரு பக்கம் போலீஸ் வேலைக்கும் முயற்சி பண்றேன். 2 வருஷமாக மும்பையில் நான் இருக்கும்போதுதான், லட்சுமணனை நான் பார்த்தேன்.

அனுமதி
2 வருட காதல் இது. வீட்டில் முறையான அனுமதி வாங்கி முறைப்படி ரிஜிஸ்டர் செய்து கல்யாணம் செய்துள்ளோம். ஆனால் இது உடனே நடந்துடல.. கோயில்ல எங்க கல்யாணத்துக்கு எதிர்ப்பு சொன்னாங்க. அப்பறம், கடலூர் கலெக்டர் கிட்ட போய் மனு கொடுத்து, அங்க அனுமதி வாங்கினபிறகுதான் இந்த கல்யாணம் நடந்தது" என்கிறார் வெட்க சிரிப்புடன்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications