கொரோனா பிஎஃப் 7ஐ இம்போர்ட் செய்யும் இந்தியர்கள்! இத்தனை பேருக்கு பாதிப்பா? மீண்டும் கட்டுப்பாடுகள்?
டெல்லி : உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் பிஎஃப் 7 காரணமாக மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில் இதுவரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு இந்தியாவிலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து இருக்கிறது.
கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது.
சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பிஎஃப் 7
இதன் காரணமாக சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு கூறியது,. இதனையடுத்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உச்சகட்ட அச்சம்
தற்போது வரை சீனா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டில் உச்சகட்ட கண்காணிப்பு நிலவி வரும் நிலையில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல், தடுப்பூசி பூஸ்டர் செலுத்துவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடும் கட்டுப்பாடுகள்
மேலும் சீனா தாய்லாந்து ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள்ளாக எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமில்லாமல் இந்தியா போலவே பல உலக நாடுகளும் சீனாவில் இருந்தும் மற்ற நாடுகள் வழியாக வரும் பயணிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. கடந்த சில நாட்களில் வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

11 வகை கொரோனா
இதன் காரணமாக விமான நிலையங்களில் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 24-ம் தேதியில் இருந்து ஜனவரி 3ஆம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 19,227 பயணிகள் வந்துள்ள நிலையில் அவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 124 பேரில் கொரோனா பரிசோதனை மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது அதில் 40 பேருக்கு 11 வகை புதிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

பாதிப்பு அதிகரிப்பு
14 பேருக்கு எக்ஸ்பிபி வகை கொரோனா தொற்றும் 9 பேருக்கு பிக்யூ வகை கொரோனா தொற்றும் ஒருவருக்கு சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7 கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் தரும் தகவலை வெளியிட்டு இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 288 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்துள்ளதோடு நான்கு பேர் பலியாகி உள்ளனர் தினசரி பாதிப்பு விகிதம் 0.01 , கொரோனாவில் இருந்து குணம் அடைவோர் விகிதம் 98.80 சதவீதமாகவும் இருக்கிறது. தற்போதைய சூழலில் நாடு முழுவதும் கொரோனா காரணமாக 2503 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications