வெறும் 19 வயசுதான்.. மொத்தம் 50 பேர்.. குமட்டும் ஆபாசம்.. எல்லை மீறின டார்ச்சர்.. ஷாக் டெல்லி!
டெல்லி: ஒருத்தருக்கு 19 வயசுதான் ஆகுது.. அதுக்குள்ள 50 பெண்களின் வாழ்க்கையை பொதுவெளியில் சீரழித்துள்ளார்.. ஏகப்பட்ட பணமும் சம்பாதித்துள்ளார்.. இப்போது கம்பி கொண்டிருக்கிறார்..!
டெல்லி பரிதாபாத்தை சேர்ந்தவர் இந்த இளைஞர்.. பெயர் ரஹிம்கான்.. 19 வயசாகிறது.. படிப்பு ஒன்னும் ஏறவில்லை போலும்.. வெறும் 8-ம்கிளாஸ்தான் படித்திருக்கிறார்.
ஆனால், சோஷியல் மீடியாவில் இருக்கும் மொத்த மொள்ளமாரித்தனத்தையும் கரைத்து குடித்துள்ளார். மார்பிங் செய்யும் பல்வேறு ஆப்களை இவர் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்... இதை வைத்து, போலி அக்கவுண்ட்கள் நிறைய ஆரம்பித்திருக்கிறார்..

கவர்ச்சி
இதை வைத்து, பல பெண்கள், சிறுமிகளுக்கு குறி வைத்துள்ளார். அவர்களது போட்டோக்களை எடுத்து கொள்வாராம்.. அதை ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும், மார்பிங் செய்துவிடுவார்.. இதை வைத்து கொண்டு, சம்மந்தப்பட்ட பெண்களிடம், ஆபாச போட்டோவை அனுப்புமாறும் மிரட்டுவாராம்.. இப்படி 50 பெண்கள் இவரிடம் சிக்கி இருக்கிறார்கள். இவரது சேட்டிங் மொத்தமும் ஆபாசமும், அசிங்கமுமாய் குமட்டி கொண்டு வருகிறது.

வழக்கு
இறுதியில், இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார்... அதன்பேரில் வழக்கு பதிவு செய்த ஆர்பி புரம் போலீசார், விசாரணையை ஆரம்பித்தனர்.. அதற்குள் ரஹிம்மை காணவில்லை.. அவரது போலி அக்கவுண்ட்களை போலீசார் ஆய்வு செய்து, அவர் எங்கிருக்கிறார் என்ற அட்ரஸையும் கண்டுபிடித்து கொண்டு வந்துள்ளனர்.. அப்படித்தான் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் சிக்கினார் ரஹிம்.. அங்கு போய் பதுங்கி இருந்துள்ளார்..

கைது
பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், எல்லா தவறுகளையும் ஒப்புக் கொண்டார்.. பெண்களை ஆபாசமாக பார்ப்பது தனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம் என்றும், தனிபட்ட விருப்பங்களுக்காகவே இப்படியெல்லாம் செய்ததாகவும் வாக்குமூலம் தந்தார். இதையடுத்து, ரஹிமிடம் செல்போனை போலீசார் பறிமுதல் செய்து அதை ஆய்வு செய்தனர்... அதை பார்த்தால், அதற்கு மேல் தூக்கி வாரிப்போட்டது..

வீடியோக்கள்
50 பெண்கள் மட்டுமில்லாமல், வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.. பாதிக்கப்பட்ட பெண்களிடம் தொடர்பு கொண்டு விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர்.. எத்தனை பேரை ரஹிம் ஏமாற்றினார்? எவ்வளவு பணம் மிரட்டி சம்பாதித்தார்? என்ற விசாரணையும் நடந்து வருகிறது!