1,50,000 டோஸ் ரஷ்ய கொரோனா தடுப்பூசி இந்தியா வந்து 2 வாரம் ஆச்சு.. இன்னும் அனுமதி தராத பின்னணி என்ன?
டெல்லி: ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகள் மே 1 அன்று ஹைதராபாத்திற்கு வந்தன. முதல் பேட்ஜ் வந்து 10 நாட்களுக்கு மேலாகிவிட்டபோதிலும், இதுவரை அந்த தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை.
இந்தியா ஒவ்வொரு நாளும், சராசரியாக, 3 லட்சம் கோவிட் -19 கேஸ்களை பதிவு செய்து வரும் நிலையில், பல மாநிலங்கள், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தடுப்பூசி இல்லாமல் தள்ளாடி வரும் நிலையில், ரஷ்ய தடுப்பூசி ஏன் பயன்பாட்டுக்கு வரவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு 1,50,000 ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளின் முதல் பேட்ஜ் இறக்குமதி செய்யப்பட்டன.

பரிசோதனை
அதேநேரம், நெறிமுறையின்படி, ரஷ்ய தடுப்பூசியின் 100 மாதிரிகள் பேட்ஜ் சோதனைக்காக இமாச்சல பிரதேசத்தில் உள்ள மத்திய மருந்து ஆய்வகத்திற்கு (சி.டி.எல்) அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் அதற்குப் பிறகு 14 நாட்கள் ஆகிவிட்டன, இன்னும் ரிசல்ட் தெரியவில்லை. இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகளுக்கான நெறிமுறை இது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) இந்த நெறிமுறையை வகுத்துள்ளது.

நாட்கள் குறைப்பு
பேட்ஜ் சோதனை செயல்முறை முடிவுகளை கொடுக்க குறைந்தது 10 நாட்கள் ஆகும். தடுப்பூசிகளை அனுமதிப்பதை விரைவுபடுத்துவதற்காக, தடுப்பூசிகளை பரிசோதிப்பதற்கான குறைந்தபட்ச காலமாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட 28 நாட்களில் இருந்து இப்போது, 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா, ஐரோப்பா ஒப்புதல் இல்லை
இருப்பினும், ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு அமெரிக்க எஃப்.டி.ஏ அல்லது டபிள்யூ.எச்.ஓ அல்லது ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டாளர் போன்ற சர்வதேச அளவில் நம்பகமான மருந்து கட்டுப்பாட்டாளர்கள்த இன்னும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம்
நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், கூறுகையில், அடுத்த வாரத்திற்குள் தடுப்பூசி சந்தைக்கு வரும் என்று நம்புகிறேன் என்றார். "ஸ்பூட்னிக் வி தடுப்பூசி இந்தியா வந்துவிட்டது. இது அடுத்த வாரம் சந்தையில் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவில் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 216 கோடி டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படலாம். இதில் 75 கோடி டோஸ் கோவிஷீல்ட் மற்றும் 55 கோடி கோவேக்சின் ஆகியவை அடங்கும். 15.6 கோடி டோஸ் ஸ்பூட்னிக் வி தடுப்பூசிகளும் சந்தையில் கிடைக்கும்." என்றார் வி.கே.பால்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications