இதே வேகத்தில் கொரோனா வேக்சின் போட்டால்.. 3ம் அலையில் தினமும் 6 லட்சம் கேஸ்கள் வரலாம்.. ரிப்போர்ட்!
டெல்லி: இந்தியாவில் மக்களுக்கு வேக்சின் போடும் வேகம் மிகவும் குறைவாக இருக்கிறது, இதே வேகத்தில் கொரோனா வேக்சின் போடப்பட்டால் மூன்றாம் அலையின் போது இந்தியாவில் தினசரி 6 லட்சம் பேர் கொரோனா மூலம் பாதிக்கப்படலாம் என்று தேசிய பேரிடர் மேலாண்மை இன்ஸ்டிடியூட் ( National Institute of Disaster Management) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு செப்டம்பர் மாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை இன்ஸ்டிடியூட் வல்லுனர்கள் குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் செப்டம்பர் மாதம் தொடங்கும் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதம் உச்சம் தொடலாம் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் இந்தியாவில் வேக்சின் போடும் வேகம் குறைவாக இருப்பதாகவும், இதன் காரணமாக இந்தியாவின் மூன்றாம் அலையின் வீரியம் இரண்டாம் அலையை விட மோசமாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செரோ சர்வே உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை, பல்வேறு வல்லுனர் குழு வெளியிட்ட புள்ளி விவரங்களை குறிப்பிட்டு தேசிய பேரிடர் மேலாண்மை இன்ஸ்டிடியூட் இந்த நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அறிக்கை
தேசிய பேரிடர் மேலாண்மை இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவின் வேக்சின் போடப்படும் வேகம் மிக குறைவாக உள்ளது. பல்வேறு சர்வதேச நாடுகளை விட இந்தியாவின் வேக்சினேஷன் குறைவாகவே உள்ளது. இதே வேகத்தில் இந்தியாவில் வேக்சின் போடப்பட்டால் மூன்றாம் அலையின் போது இந்தியாவில் தினசரி 6 லட்சம் கொரோனா கேஸ்கள் வரும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் இதுவரை 7.6 சதவிகிதம் பேர்தான் முழுமையாக இரண்டு டோஸ் வேக்சின் பெற்றுள்ளனர்.

வேக்சின்
அதாவது மொத்தம் 10.4 கோடி பேர்தான் இந்தியாவில் இரண்டு டோஸ் வேக்சின் பெற்றுள்ளனர். இந்தியாவில் வேக்சின் போடப்படும் சதவிகிதம் 3.2 சதவிகிதமாக உள்ளது. இது மிக குறைந்த வேகம். இப்போது 40 லட்சம் பேர்தான் சராசரியாக தினமும் வேக்சின் போட்டுக்கொள்கிறார்கள். இது தினமும் 1 கோடி டோஸ் என்ற அளவிற்கு உயர வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்தியாவில் மூன்றாம் அலையின் போது 6 லட்சம் கேஸ்கள் தினமும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

உயர்த்த வேண்டும்
வேக்சின் போடும் வேகத்தை தினமும் 1 கோடி என்ற அளவில் மத்திய அரசு உயர்த்தினால் இந்தியாவில் மூன்றாம் அலையில் ஏற்படும் தினசரி கேஸ்கள் இரண்டாம் அலையை விட 25 சதவிகிதம் குறைவாக இருக்கும். ஆனால் இந்த வேகத்தை உயர்த்துவதற்கான அறிகுறிகள் இப்போது தெரியவில்லை. இந்தியா ஒரே வேகத்தில் வேக்சின் போட்டு வருகிறது. இது மூன்றாம் அலையில் சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதோடு இந்தியாவில் உடனடியாக மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். மூன்றாம் அலையை சமாளிக்க அது மட்டுமே உதவி புரியும்.

பொது சுகாதாரம்
பொது சுகாதாரம் மூன்றாம் அலையை சமாளிக்கும் அளவிற்கு வலுவாக இல்லை. முக்கியமாக மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிக்க வாய்ப்புள்ள நிலையில் குழந்தைகளுக்கான பொது சுகாதாரம் மோசமாக உள்ளது. இந்தியாவில் நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையில் பொது சுகாதாரத்தில், முக்கியமாக குழந்தைகளுக்கான மருத்துவமனை வசதிகளில் பெரிய வேறுபாடு காணப்படுகிறது. இவர்களுக்கான போதுமான மருத்துவ வசதிகளை உடனடியாக ஏற்படுத்துவதில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். வேக்சினேஷன் மட்டுமே கொரோனா மூன்றாம் அலையின் வீரியத்தை குறைக்கும் ஒரே வழி.

எப்படி இருக்கிறது?
அதேபோல் வேக்சின் போடுவதில் பாலின சமத்துவம் இல்லை. பெண்கள் குறைத்து அளவிலேயே வேக்சின் பெற்றுள்ளனர். 1000 ஆண்களுக்கு 856 பெண்கள் மட்டுமே வேக்சின் பெற்றுள்ளனர். இது மிக மோசமான பாலின வேறுபாடு. இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 924 பெண்கள் உள்ளனர். அப்படி இருக்கும் போது 856 பெண்களுக்கு மட்டுமே வேக்சின் போடுவது மோசமான நிலை என்றே குறிப்பிட வேண்டும். மேற்கு வங்கத்தில் 44 சதவிகிதம் பெண்கள் குறைந்தது ஒரு டோஸ் வேக்சினாவது பெற்றுள்ளனர். உத்தர பிரதேசத்தில் 42 சதவிகித மக்கள் குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் பெற்றுள்ளனர்.

கேரளா
கேரளா, ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டுமே ஆண்களை விட பெண்கள் அதிகமாக வேக்சின் பெற்றுள்ளனர். அதேபோல் குழந்தைகளுக்கான வேக்சினேஷன் இன்னும் இந்தியாவில் தொடங்கப்படாததும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். செரோ சர்வேயின்படி இந்தியாவில் 2-17 வயது கொண்டவர்களில் 55.7 சதவிகிதம் பேருக்கு உடலில் ஆண்டிபாடி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது இன்னொரு அச்சமூட்டும் உதாரணம். இதனால் இன்னும் பல குழந்தைகளுக்கு வரும் நாட்களில் கொரோனா ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

வேக்சின்
குழந்தைகளுக்கான வேக்சினேஷன் இன்னும் தொடங்காத நிலையில் மூன்றாம் அலையின் போது இவர்கள் அதிகம் பாதிக்கும் ஆபத்துகளும் உள்ளன. இந்தியாவில் போதிய குழந்தைகள் நல மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று தேசிய பேரிடர் மேலாண்மை இன்ஸ்டிடியூட் ( National Institute of Disaster Management) தெரிவித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலையில் 6 லட்சம் பேர் வரை தினமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்த அமைப்பு வெளியிட்டு இருக்கும் அறிக்கை மூன்றாம் அலை மீதான அச்சத்தை அதிகரித்து உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications