டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தகிக்க வைக்கும் தக்காளி காய்ச்சல்! 5 வயது குழந்தைகளுக்கு பாதிப்பு! செய்ய வேண்டியவை? செய்யக் கூடாதவை?

Google Oneindia Tamil News

டெல்லி : கொரோனா வைரஸ் குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில் இந்தியாவில் இதுவரை 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் ஐந்து வயது குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

    Kerala Tomato Fever | Tomato Fever Symptoms | Tomato Flu | Oneindia Tamil

    கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உலகம் முழுவதும் பரவி தற்போது வரை உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஒன்று, இரண்டு, மூன்று என அடுத்தடுத்த அலைகளில் லட்சக்கணக்கான மக்களை காவு கொண்ட நிலையில் அடுத்ததாக குரங்கு அம்மை பாதிப்பு பரவி வருவதும் சுகாதாரத் துறை நிபுணர்களையும் பொதுமக்களையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    குரங்கம்மை மட்டும்.. தக்காளி காய்ச்சல், டெங்கு, ஜப்பான் காய்ச்சல்.. இந்தியாவில் பரவும் வேறு நோய்கள் குரங்கம்மை மட்டும்.. தக்காளி காய்ச்சல், டெங்கு, ஜப்பான் காய்ச்சல்.. இந்தியாவில் பரவும் வேறு நோய்கள்

    தக்காளி வைரஸ்

    தக்காளி வைரஸ்

    ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட குரங்கு அம்மை தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் பரவி இருக்கும் நிலையில் தற்போது புதிய வகை அச்சுறுத்தலாக தக்காளி வைரஸ் எனும் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தொண்டை வலி ஏற்பட்டு உணவு சாப்பிட முடியாமல் சிரமப்படுவார்கள் மேலும் தோள் பகுதிகளில் சிவப்பு நிற திட்டுகள் தோன்றும். ஆனால் தக்காளிக்கும் இந்த வகை வைரசுக்கும் தொடர்பில்லை தக்காளி போன்ற திட்டுகள் தோன்றுவதால் இந்த பெயர் பெற்றுள்ளது.

    சுகாதார கவலை

    சுகாதார கவலை

    தற்போது இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொவருக்கும் பரவும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முதலாக கேரளாவில் இந்த வகை தக்காளி காய்ச்சல் பரவி நிலையில் தற்போது இந்தியாவில் அதிகரித்து பெரும் சுகாதார கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை இந்தியாவில் 82 பேர் இந்த வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கேரளாவின் கொல்லம் பகுதியில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த வகை வைரஸ் பதவி இருப்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளாவில் தீவிரம்

    கேரளாவில் தீவிரம்

    இந்தியாவில் கொரோனா நான்காவது அலை அச்சுறுத்தல் போலவே தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வைரஸ் குழந்தைகளுக்கும் கண்டறியப்பட்டுள்ளதால் கூடுதலாக அச்சம் ஏற்பட்டுள்ளது. கேரளாவின் அஞ்சல், ஆரியங்காவு,நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் தக்காளி வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் நோய் பரவும் அபாயம் இருப்பதாக தி லான்செட் கூறியுள்ளது.

    அறிகுறிகள் என்னென்ன?

    அறிகுறிகள் என்னென்ன?

    தக்காளி காய்ச்சல் வந்தால் கை, கால், வாயின் உள்பகுதியில் சிறு கொப்புளங்கள் தோன்றும். வாயில் உள்ள தோலில் அரிப்பு ஏற்படும். கால்-கை வலிப்பு மற்றும் சிறுநீரக நோய் உள்ள குழந்தைகளை தக்காளி காய்ச்சல் பாதிக்கலாம், இருப்பினும் இந்த நோய் ஒரு வாரத்தில் தானாகவே மறைந்துவிடும். அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரின் சேவையை நாட வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    என்னென்ன செய்ய வேண்டும்

    என்னென்ன செய்ய வேண்டும்

    குழந்தைக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரின் ஆலோசனை அவசியம். பாதிக்கப்பட்ட குழந்தை கொப்புளங்கள் சொறிவதை தவிர்க்க வேண்டும் மற்றும் தூய்மை மற்றும் சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும். சரியான நீரேற்றத்துடன் சரியான ஓய்வு எடுக்க வேண்டுமென சுகாதார நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

    English summary
    82 cases of tomato fever have been confirmed in India so far in line with the cases of coronavirus monkeypox ; கொரோனா வைரஸ் குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில் இந்தியாவில் இதுவரை 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X