'சிவனேன்னு தான போயிட்டு இருந்தேன்' ஏன் இப்படி? சிறுத்தைப்புலி அட்டாக்கில் தப்பிய இளைஞர்..ஷாக் வீடியோ
டெல்லி: சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞரை சிறுத்தைப்புலி பாய்ந்துவந்து கடிக்க முயலும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி கொண்டிருக்கிறது.
ஒடிசாவை சேர்ந்த ஐ.எப்.எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா. இவர் வன விலங்குகள் மற்றும் சுவாரசிய சம்பவங்கள் குறித்த வீடியோக்களை அவ்வப்போது தனது டுவிட்டரில் வெளியிடுவது வழக்கம்.
இவ்வாறு அவர் வெளியிடும் வீடியோக்கள் பெரும்பாலும் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஹிட் அடித்து விடும் என்றே சொல்லலாம்.

டிரெண்ட் ஆகும் வீடியோ
அந்த வகையில் ஐ.எப்.எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில்தீயாக பரவி வருகிறது. இந்த சம்பவம் நடந்தது நிறைய நாட்கள் ஆகியிருக்கும் என்றாலும் தற்போது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஹிட் அடித்து வருகிறது. சிவனேன்னு சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒரு இளைஞரை சிறுத்தைப்புலி ஒன்று சாலைக்கு வந்து பாய்ந்து கடித்து தாக்க முயன்ற வீடியோ தான் இப்போது டுவிட்டரில் பரவிக்கொண்டிருக்கிறது.

பாய்ந்து வந்து தாக்கிய சிறுத்தைப்புலி
சரியாக ஒரு நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், 'இளைஞர் ஒருவர் சைக்கிளில் சாலையில் சென்றுகொண்டிருக்கிறார். சாலையின் இருபுறமும் காடுகள் போல் இருக்கிறது. மேலும் கார் உள்ளிட்ட வாகனங்கள் அந்த சாலையில் கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. இளைஞர் சாலையின் ஓரமாக சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறார். அப்போது திடீரென சாலையின் ஓரத்தில் பதுங்கியிருந்த சிறுத்தைப்புலி ஒன்று இளைஞர் மீது பாய்ந்தது.

திகைத்து போன இளைஞர்
கண் இமைக்கும் நேரத்தில் அந்த சிறுத்தப்புலி சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞர் மீது முன்னங்கால்களை தூக்கி போட்டு பாய்ந்து கடிக்க முயல்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சிறுத்தைப்புலியின் பிடியில் இருந்து அந்த இளைஞர் தப்பி விடுகிறார். அவர் சைக்கிளோடு கீழே விழுந்ததால் தான் சிறுத்தைப்புலியிடம் இருந்து தப்பியது போல் தெரிகிறது. இதனால் அய்யோ.. என பயந்து அந்த இளைஞரும் ஒரு நிமிடம் திகைத்துப்போய் பதறியடித்துக்கொண்டு மீண்டும் சைக்கிளில் வந்த பாதையிலேயே திரும்பிவிடுகிறார்.

புல்லரிக்க வைத்த வீடியோ
அடுத்த சில நொடிகளிலேயே அந்த சிறுத்தைப்புலி மீண்டும் காட்டுப்பகுதிக்குள் ஓடி விடுகிறது. திடீரென சிறுத்தைப்புலி நம்மை தாக்கியதை அந்த இளைஞரால் நம்ப முடியாதது போல் இருந்தது. அந்த சாலையில் மேலும் இரு சைக்கிள்களில் நின்று கொண்டிருந்த நபர்கள் நடந்ததை நேரில் பார்த்து திகைத்து போய் நிற்கின்றனர். அவர்களிடம் இளைஞர் நடந்த கூறி விளக்குகிறார்'' இவ்வாறு இந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. புல்லரிக்க வைக்கும் இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோவை இது வரை 25 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு கீழே, தங்கள் கருத்தைக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதில் ஒருவர் காடுகளை அழித்து வருவதால் விலங்குகள் கோபமடைந்து இருப்பதாகவும், இதனால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் பதிவிட்டுள்ளார். ஒரு சிலர் அந்த இளைஞர் உண்மையில் அதிர்ஷடக்காரர் தான் எனவும் பதிவிட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications