இது நடந்தால்.. பாஜகவிற்கு லோக்சபா தேர்தல் ரொம்ப கடினமாக மாறும்.. பிரசாந்த் கிஷோர் சொல்லும் சீக்ரெட்
டெல்லி: சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்கள் என இரண்டும் வெவ்வேறானவை. உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. சித்தாந்த ரீதியாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவுக்கு 2024 நாடாளுமன்ற தேர்தல் கடினமாக இருக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.
இந்தியாவில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். இவர் ஆங்கில செய்தி சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் நடந்து முடிந்த உத்தர பிரதேச தேர்தல் குறித்து பேசினார்.
மேலும், 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்தார். இதுதொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

மோடிக்கு தெரியும்
நாடாளுமன்ற தேர்தலின் முடிவை ஒருபோதும் மாநில தேர்தல் முடிவுகள் தீர்மானிக்காது. இது மற்றவர்களை காட்டிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றாக தெரியும். இதற்கு உதாரணமாக உத்தர பிரதேசத்தை கூறலாம். அந்த மாநிலத்தில் 2012ல் என்ன நடந்தது என்று பாருங்கள். சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் பாஜக நான்காம் இடம் பிடித்தது. ஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசம் பாஜகவுக்கு கைக்கொடுத்தது.

நாடாளுமன்ற தேர்தல் வேறு
5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறக பிரதமர் நரேந்திர மோடி தனது பேச்சில் 2017 உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் 2019 நாடாளுமன்ற தேர்தலை மேற்கொள் காட்டி பேசினார். மேலும் தற்போதைய தேர்தல் முடிவு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என கூறினார். ஆனால் உத்தர பிரதேச மாநில மக்கள் சட்டசபை தேர்தலை போல் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தது இல்லை. இதற்கு 2002ம் ஆண்டு முதல் என்னால் உதாரணங்களை கூற முடியும்.

உத்தரவாதம் என்ன
என்னை பொறுத்தவரை பாஜக லீக் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. லீக் போட்டியில் தோற்கடித்த அணியை பைனலில் எதிர்கொண்டால் முந்தைய அனுபவம் சாதகமாக இருக்கலாம் என வர்ணனையாளர்கள் கூறலாம். ஆனால் அந்த அணியை கட்டாயம் தோற்கடிக்கலாம் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது.

நீண்டகாலம்
நான் 2012ல் பிரதமர் நரேந்திர மோடியுடன் குஜராத் சட்டசபை தேர்தலில் பணிபுரிந்தேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டுகள் இருக்கும்போதே பணியை துவக்கினோம். 2014ல் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சியை பிடிக்க போகிறார் என 2012 காலக்கட்டத்திலேயே அனைவரும் அறிந்திருந்தனர். தற்போதும் அதையே நம்புகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டுகள் உள்ளபோதே தனது வெற்றியை உறுதி செய்ய பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார். ஆனால் 2 ஆண்டுகள் என்பது அரசியலில் மிக நீண்ட காலம்.

காங்கிரஸ் நிலை
இதில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். காங்கிரஸ் கட்சி மறுஅவதாரம் எடுக்க வேண்டும். கொள்கை, சித்தாந்தங்களை வைத்து கொண்டு மற்ற அனைத்தையும் மாற்றி அமைக்க வேண்டும். மேலும் சித்தாந்த ரீதியாக பாஜகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் கூட்டணி அமைத்தால் பாஜகவுக்கு கடினமாக இருக்கும். இது நடந்தால் 2024 தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிச்சயம் பாஜகவுக்கு கடும் சவாலை அளிக்கலாம்.

பிரசாரத்தில் எதிரொலிக்கவில்லை
உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவுக்கு என்று ஒரு முகம் உள்ளது. ஆனால் பிரசாரத்தில் எதிரொலிக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் மோடி அல்லது யோகியை தோற்கடிக்க விரும்புகிறீர்கள் என்பதை தாண்டி வேறு எதையும் முன்னெடுக்கவில்லை. பிரச்சாரம் போதியளவில் இ்லலை. தேர்தலின்போது பிரசார வியூகங்களில் தவறிழைக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

விமர்சனம்
முன்னதாக 5 மாநில தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், ‛‛5 மாநில தேர்தல் முடிவுகள் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம். 2024 பாராளுமன்ற தேர்தல் முடிவு தற்போதைய உத்தர பிரதேச தேர்தல் முடிவுகளிலேயே தென்படுகிறது '' என கூறினார். இதை பிரசாந்த் பிரசாந்த் கிஷோர் விமர்சனம் செய்திருந்தார்.

2024ல் உண்மையான போர்
இதுகுறித்து பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், ‛‛இந்தியாவுக்கான போர் 2024ல் நடத்தப்பட்டு முடிவுகள் தீர்மானிக்கப்படுமே தவிர, பிற மாநில தேர்தல்கள் முடிவு செய்யாது. இது சாகேபுக்கும் தெரியும். அதனால்தான் மாநில தேர்தல் முடிவுகள் மூலம் எதிர்க்கட்சிகளிடம் உளவியல் பாதிப்பை ஏற்படுத்த புத்திசாலித்தனமாக முயற்சி மேற்கொள்கிறார். இந்த தவறான சித்தரிப்புக்கு பலியாகவோ, அல்லது பாதிப்படையவோ வேண்டாம்'' என கூறியுள்ளார். பிரசாந்த கிஷோர் தனது டுவிட்டர் பதிவில் ‛சாகேப்' என பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார்.
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக












Click it and Unblock the Notifications