அண்ணாமலையின் அறிவிப்பு.. வரவேற்ற திமுக எம்பி ஆ.ராசா! ஆனால் ஒரு “கண்டிஷன்” -வதந்தி பரப்புவதாக புகார்
கோவை: அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பை வரவேற்பதாகவும், ஆனால் அதை அவர் நிரூபிக்க வேண்டும் என்றும் திமுக மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா தெரிவித்து உள்ளார்.
கோவையில் நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும் திமுக துணை பொது செயலாளருமான ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் டிட்கோ தொழிற்பூங்கா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது விவசாயிகள் போராட்டத்தை அறிவித்து மக்களிடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறினர். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தொழிற்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் பேசி உள்ளோம்.

அன்னூரில் நிறுவனங்கள்
டிட்கோ பகுதியில் வர உள்ள நிறுவனங்கள் மாசு உருவாக்கும் நிறுவனங்கள் அல்ல. மத்திய அரசு மாசு ஏற்படுத்தும் நிறுவனங்களை அங்கு அனுமதிக்காது. அங்கு கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் விளை நிலங்களாக இல்லை. இதனால் கையகப்படுத்த எந்த தடையும் இல்லை
அச்சத்தின் காரணமாக மக்கள் போரட்ட நிலைப்பாட்டை எடுத்து உள்ளனர்.

அரசு அறிவிப்பு
இன்றோ அல்லது நாளையோ இது தொடர்பாக விரிவான அரசு அறிவிப்பு வெளியாகும். நிறுவனத்தின் நிலங்கள் மட்டுமல்ல, மக்களின் நிலங்களும் எடுக்கப்படும் என வதந்திகள் பரப்புகின்றனர். ஆனால் நிறுவன நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்பட உள்ளது. மக்கள் தாங்களே கொடுத்தால் மட்டும் நிலம் எடுக்கப்படும். விளை நிலங்கள் ஒருபோதும் எடுக்கப்படாது.

அன்னூரில் டிட்கோ
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பரப்படும் தகவல்கள் தவறானது. நிலத்தடி நீரை கெடுக்கும் தொழிற்சாலைகள் அங்கு வராது. அனுமதி இல்லாமல் தனிநபர் சாகுபடி செய்த நிலத்தை எடுக்க மாட்டோம். காற்றையும் நிலத்தையும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் வராது. அன்னூரில் டிட்கோ அமைக்கப்படுவதால் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெருகும்.

மக்கள் பக்கம் நிற்போம்
பொய் பிரச்சாரத்தை ஊடகங்கள் மூலம் முறியடிக்க வேண்டும். 50 கோடி ரூபாய்க்கு மேல் எந்த நிறுவனங்கள் வந்தாலும் மத்திய அரசு மூலம் தான் அனுமதி பெற்று வர வேண்டும். அண்ணாமலை அரசியல் எனக்கு புரியவில்லை. நாங்குநேரியை தொழில் முனைவோர் விரும்பவில்லை. அதற்கு என்ன செய்ய முடியும்? மக்களின் எதிர்ப்புகள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் மக்கள் பக்கம் தான் இருப்போம்.

அண்ணாமலை அறிவிப்புக்கு வரவேற்பு
அமைச்சர்கள் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பை வரவேற்கிறேன். ஆனால் அதை நிரூபிக்க வேண்டும். மக்களின் தேவை என்ன என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கேட்டு தீர்த்து வைப்பேன். பாதிப்பு ஏற்படும் என்றால் மக்கள் பக்கம் நிற்பேன்.

மக்களிடம் பேசி உள்ளேன்
ஏற்கனவே அன்னூர் டிட்கோ விவகாரம் தொடர்பாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தன்னை சந்தித்து உள்ளனர். அவர்களது பிரச்சனை என்ன என்று கேட்டறிந்து உள்ளேன். எவ்வித பிரச்சனை பற்றியும் அவர்கள் கூறவில்லை. என்னிடம் தெரிவித்த கருத்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நான் தெரிவித்து உள்ளேன்." என்று கூறி இருக்கிறார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications