12ம் வகுப்பு சிறுமி மீது.. பைக்கில் வந்து ஆசிட் வீசிய "சிறுவர்கள்".. டெல்லியில் பட்டப்பகலில் கொடுமை!
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி மீது சிறுவன் ஒருவன் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் துவாரகா பகுதியில் இன்று காலை சுமார் 7 மணியளவில் பள்ளி செல்வதற்காக 12ம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர் தனது சகோதரியுடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்திருக்கிறார்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு சிறார்கள் பைக்கில் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளனர். இதனையடுத்து திடீரென அந்த சிறுவர்கள் மாணவி மீது ஆசிடை வீசியுள்ளனர்.

கேள்வி
ஆசிட் பட்டு கதறிய சிறுமியை மீட்டு முதலுதவி செய்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைனருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமி டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த குற்றத்தில் இரண்டு சிறுவர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் சிறுமி மீது ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் டெல்லி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சியினர் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதேபோல காவல்துறையினரின் நடவடிக்கையையும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

சிசிடிவி காட்சி
சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியும் உடன் இருந்த நிலையில் அவரிடம் விசாரித்ததில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அவரது சகோதரிக்கு நன்கு பரிட்சியமான இருவர்தான் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த இரண்டு பேரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரும் 17 வயது சிறுவன் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மற்றொருவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதிகரித்த குற்றங்கள்
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விமர்சித்துள்ளன. ஆனால் டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைதான் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதால் மத்திய அரசு மீது ஆம் ஆத்மியினர் குற்றம்சாட்டியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் மற்ற அனைத்து குற்றங்களும் குறைந்து இருந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் மட்டும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறியுள்ளன. குறிப்பாக 2018ம் ஆண்டு நாடு முழுவதும் 228 பெண்கள் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 2019ம் ஆண்டு கொரோனா தொற்று பரவியதால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

காரணம்
இந்நிலையில் இந்த ஆண்டு ஆசிட் தாக்குதல் எண்ணிக்கை 249 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து 2020ம் ஆண்டு 182 ஆசிட் வீச்சு சம்பவங்களும், 2021ம் 176 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. பெரும்பாலும் காதல் விவகாரங்களில் பெண்களை பழிவாங்க இது போன்று ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இன்று டெல்லியில் நடைபெற்ற ஆசிட் வீச்சு சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications