'உங்கள் பதில் திருப்தி அளிக்கவில்லை'..... முதல் நாளிலேயே ஸ்மிருதி இரானியுடன் வைகோ மல்லுக்கட்டு
Recommended Video
டெல்லி: ராஜ்யசபாவில் எம்.பி.யாக பதவியேற்ற முதல் நாளே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் மோதியிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
ராஜ்யசபாவில் வைகோ இன்று எம்.பி.யாக தமிழில் உறுதி மொழி வாசித்து பதவி ஏற்றார். இதனைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் வைகோ துணை கேள்வி கேட்டார்.
அப்போது பேசிய வைகோ, சபை தலைவர் அவர்களே! 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சபையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு தந்தமைக்கு நன்றி என்றார். அப்போது ராஜ்யச்பாவில் இருந்த பிரதமர் மோடி மேஜயை தட்டி வரவேற்றார்.

பருத்தி, பஞ்சு விலை
இதனைத் தொடர்ந்து பேசிய வைகோ, பருத்தி விலை, பஞ்சு விலை மேலும் கீழுமாய் திடீர் திடீரென மாறுவது ஒவ்வொரு ஆண்டும் நூற்பு ஆலைகளுக்கு நெருக்கடி ஆகிறது. மூடப்பட்ட ஆலைகளால் இந்தியாவில் எத்தனை இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தார் என்று அமைச்சர் பதில் தருவாரா? தமிழ்நாட்டில் நூற்பு ஆலைகள் சுற்றுச் சூழல் விதிகளை முறையாக பின்பற்றுகின்றன.

ஸ்மிருதி மறுப்பு
ஆனாம் மற்ற மாநிலங்கள் அப்படிப் பின்பற்றுவது இல்லை. இதனால் தமிழக நூற்பு ஆலைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் விதிகளை சமமாகப் பின்பற்ற அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா? என கேள்வி கேட்டார். அமைச்சர் ஸ்மிருதி இரானி இதை மறுத்தார்.

சீனா டூ வங்கதேசம்
அவர் மறுத்த பின்னரும், சீனாவில் இருந்து ஏராளமான ஆயத்த ஆடைகளை குறைந்த விலையில் வங்கதேசத்துக்கு அனுப்புகின்றனர். அங்கே அந்த நாட்டு முத்திரை பதித்து இந்தியாவுக்குள் கொண்டு வந்து குவிக்கின்றனர். இதனால் நமது நூற்பு ஆலைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? என்று அமைச்சர் தெரிவிப்பாரா? என கேள்வி எழுப்பினார்.

ஆரம்பம்
இதற்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை என்றார். உடனடியாக வைகோ, உங்கள் பதிலில் திருப்தி இல்லை என பதிலடி கொடுத்தார்.
அதகளம் ஆரம்பம்!
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications