டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த ஜோஷிமத்தாக மாறும் காஷ்மீரின் டோடா மாவட்டம்? தரையில் மூழ்கும் வீடுகள்.. அடுத்தடுத்து ஷாக்

காஷ்மீரில் உள்ள டோடா மாவட்டம் தான் தற்போது நிலத்துக்குள் புதைந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே அங்குள்ள ஒரு வீட்டில் திடீரென பெரிய விரிசல் விழுந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்ட போதிலு

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தராகண்டின் ஜோஷிமத் நகரத்தை போலவே காஷ்மீரின் டோடோ மாவட்டம் தரையில் மூழ்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

ஜோஷிமத் நகரை போலவே டோடோ மாவட்டத்தில் பல்வேறு வீடுகளிலும், சாலைகளிலும் விரிசல் விழுவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

ஜோஷிமத் பேரழிவு! தேசிய பேரிடராக அறிவிக்க கோரிய மனு.. உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் உத்தரவு ஜோஷிமத் பேரழிவு! தேசிய பேரிடராக அறிவிக்க கோரிய மனு.. உயர் நீதிமன்றத்தை நாட உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜோஷிமத் பயங்கரம்

ஜோஷிமத் பயங்கரம்

உத்தராகண்டின் ஜோஷிமத் நகரம் நிலத்தில் மூழ்கும் பயங்கரத்தை எதிர்கொண்டு வருகிறது. மிக மோசமான புவியியல் அமைப்பில் அமைந்துள்ளதால் இந்த நகரத்தில் எந்தவித நீர்மின் திட்டங்கள் உட்பட எதையும் செயல்படுத்தக் கூடாது என 1974-ம் ஆண்டே ஒரு கமிஷன் அறிக்கை அளித்திருந்தது. ஆனால், அந்த அறிக்கையை காற்றில் பறக்கவிட்ட அரசாங்கம், அங்கு என்னென்ன விஷயங்களை செய்யக் கூடாதோ அவை அனைத்தையும் செய்திருக்கின்றன. இதன் காரணமாக, இப்படியொரு மோசமான விதி அந்நகரத்துக்கும், மக்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

ஜோஷிமத்தை போலவே..

ஜோஷிமத்தை போலவே..

நிலச்சரிவுகளும், சிறு சிறு நிலநடுக்கங்களும் ஜோஷிமத்தில் நாள்தோறும் ஏற்பட்டு, அங்குள்ள பல வீடுகளும், கட்டிடங்களும் இடிந்து வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அந்நகரம் நிலத்துக்குள் புதையுண்டு வருவதால் அங்கிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஒரு நகரமே நிலத்துக்குள் மூழ்கும் கொடூரம் அரங்கேறி வரும் வேளையில், காஷ்மீரில் ஒரு மாவட்டமும் இதே கதியை எதிர்கொண்டிருக்கிறது.

நிலத்தில் மூழ்கும் டோடோ

நிலத்தில் மூழ்கும் டோடோ

காஷ்மீரில் உள்ள டோடா மாவட்டம் தான் தற்போது நிலத்துக்குள் புதைந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே அங்குள்ள ஒரு வீட்டில் திடீரென பெரிய விரிசல் விழுந்தது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்ட போதிலும், அது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது டோடா மாவட்டத்தில் உள்ள 6 வீடுகளிலும் இவ்வாறு பெரிய பெரிய விரிசல்கள் விழுந்திருக்கின்றன. மேலும், நாள்தோறும் அந்த விரிசல்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன.

வெளியேற்றப்படும் மக்கள்

வெளியேற்றப்படும் மக்கள்

இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் பேரில் அங்கு புவியியல் ஆராய்ச்சியாளர்கள் டோடோ மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, டோடோ மாவட்டம் நிலத்தில் மூழ்கி வருவதாக அவர் தெரிவித்தனர். மேலும், டோடோ மாவட்டம், மக்கள் வாழ தகுதியில்லாத ஆபத்தான பகுதி (Danger Zone) என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த மாவட்டத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

English summary
Kashmir's Doda district has been found to be sinking into the ground, as has Uttarakhand's Joshimath town.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X