Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த முறை விட மாட்டேன்! டெல்லிக்குப் பறந்த ஓபிஎஸ்! நாளைக்கு இருக்கு ‘கீ’ கச்சேரி! நல்லது நடக்குமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள நிலையில் நாளை மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து, தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி கட்சி பொது குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கட்சி ஒருங்கிணைப்பாளரும் பொருளாளராக இருந்தவருமான ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

பொதுக்குழு கூட்டத்தின் போது அதிமுக அலுவலகத்தில் கலவரம் வெடித்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள சாலையில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

 இபிஎஸ்ஸிடம் சாவி ஒப்படைப்பு

இபிஎஸ்ஸிடம் சாவி ஒப்படைப்பு

இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பட்டு ஓபிஎஸ் தரப்பு தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டது. மேலும், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

ஓபிஎஸ் மேல்முறையீடு

ஓபிஎஸ் மேல்முறையீடு

இதனையடுத்து சீல் அகற்றப்பட்டு சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக கடந்த பதினெட்டாம் தேதி விசாரணை நடைபெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைத்தது தவறு என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடுமையாக வாதிடப்பட்டது.

 நாளை மீண்டும் விசாரணை

நாளை மீண்டும் விசாரணை

மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். அப்போது நடைபெற்ற விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் அதிமுக அலுவலக சாவி விவகாரத்தில் தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வருவாய்த் துறையினர் பதில் அளிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளிக்கு பிறகு அதிமுக அலுவலக சாவி விவகாரம் தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.

பலத்த எதிர்பார்ப்பு

பலத்த எதிர்பார்ப்பு

இது தொடர்பாக விரிவான விசாரணை நாளை நடத்தப்பட இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் தங்கள் தீவிர வாதங்களை முன்வைக்க இருக்கின்றனர். தற்போது அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது தரப்பு ஆதரவாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில் நாளை மேல்முறையீட்டு மனுவில் விசாரணை பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விசாரணை முடிவில் அளிக்கப்படும் தீர்ப்பினை பொருத்தே அதிமுக பொது குழு தொடர்பான வழக்குகளின் விசாரணையும் இருக்கும் என்பதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+