டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் 15 நாளில்... 2 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும்... எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் உறுதி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் இன்னும் 15 நாட்களில் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா கூறினார்.

தடுப்பூசிகள் குளிர்ந்த நிலையில் சேமிப்பு மிகவும் முக்கியமானது. அதனை வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.

AIIMS Chief says Two Vaccines Get Expert Panel’s Nod; Mass Rollout in 2 Weeks

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் உற்பத்தி செய்து வருகிறது. இந்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல் உள்நாட்டு தயாரிப்பான, 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசிக்கு அனுமதி வழங்க, நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த இரண்டு தடுப்பூசிகளும் 15 நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- நாட்டில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. கோவாக்சின் தடுப்பூசிக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. தடுப்பூசிகள் குளிர்ந்த நிலையில் சேமிப்பு மிகவும் முக்கியமானது. அதனை வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ரன்தீப் குலேரியா கூறினார்.

English summary
Randeep Gularia, head of Delhi Aims Hospital, said the vaccines would be available in India in 15 days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X