அலர்ட்டுக்கு நடுவே.. இந்தியாவில் மெல்ல உயரும் கொரோனா.. கர்நாடகா, தமிழகத்தையும் விடலையே.. ‛டேட்டா’
டெல்லி: சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் ஜனவரியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் எனவும் அடுத்த 40 நாள் முக்கியம் என டிசம்பர் கடைசி வாரத்தில் மத்திய சுகாதாரத்துறை எச்சரித்த நிலையில் தற்போது சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு என்பது மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு என்பது முந்தைய வாரங்களை காட்டிலும் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் என்பது தற்போது அதிகரித்துள்ளது. தினமும் பல லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி வருகின்றனர்.
சீனாவில் உருமாறிய ஓமிக்ரானின் பிஎப் 7 வைரசால் தான் அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இந்தியாவில் கொரோனா தடுப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜனவரியில் அதிகரிக்கும் என எச்சரிக்கை
அதன்படி வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக கொரோனா பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. மேலும் சீனா, ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான், தென்கொரியாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 40 நாள் என்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது எனவும், இந்தியாவில் ஜனவரியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மெல்ல அதிகரிக்கும் கொரோனா
இந்நிலையில் தான் இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு என்பது மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் மொத்தம் 1,526 பரை கொரோனா தாக்கியுள்ளது. இது முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது 25 சதவீதம் அதிகமாகும். அதாவது முந்தைய வாரத்தில் 1,219 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு 1,576 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகா, கேரளா, தமிழகத்தில் அதிகரிப்பு
இதேபோல் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு என்பது சட்டென அதிகரிக்க தொடங்கியது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்த ஒருவாரத்தில் 276 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய வாரத்தில் வெறும் 116 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் கூடுதலாக 160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் முந்தைய வாரம் கேரளாவில் கொரோனாவால் 416 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த வாரம் 467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் தமிழ்நாட்டிலும் முந்தைய வாரம் 47 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்த வாரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 86 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு
மேலும் இன்று காலையுடன் முடிந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 2,582 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,435 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 259 பேர், மகாராஷ்டிராவில் 159 பேர், தமிழ்நாட்டில் 89 பேர், ஒடிசாவில் 88 பேர், உத்தர பிரதேசத்தில் 1 பேர், மேற்கு வங்கத்தில் 55 பேர், ராஜஸ்தானில் 48 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

மீண்டும் அதிகரிப்பா?
இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் கூட சில மாநிலங்களில் கடந்த வாரத்தை காட்டிலும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. அதன்படி மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது குறைந்துள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் முந்தைய வாரம் 172 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 168 ஆகவும், டெல்லியில் 81 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 72 ஆகவும், ராஜஸ்தானில் 81 ஆக இருந்த கொரோனா பாதிப்பு 58 ஆகவும் குறைந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உயர தொடங்கி உள்ளது என்பது தெளிவாகிறது.

24 மணிநேரத்தில் 134 பேர் பாதிப்பு
இந்நிலையில் தான் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 186 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2020 முதல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்பது 44.6 மில்லியனாகவும் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்), பலி 5 லட்சத்து 30 ஆயிரத்து 707 ஆகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பணி விரைவு
மேலும் இந்தியாவில் கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி மீண்டும் வேகமெடுத்துள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் 45 ஆயிரத்து 769 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை 220.11 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications