கதறி அழுத சோனியா காந்தி? அமித்ஷா பேச்சால் நாடாளுமன்றத்தில் கொந்தளித்த காங்கிரஸ்.. என்ன நடந்தது?
டெல்லி: ‛‛இறந்த பயங்கரவாதிகளை நினைத்து அழுதவர் தான் சோனியா காந்தி'' என்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து லோக்சபாவில் நடந்த விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் லோக்சபாவில் அனல் பறந்தது.
நாடாளுமன்றத்தில் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்த விவாதம் நேற்று தொடங்கியது. லோக்சபாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று உரையாற்றினார்.

இதையடுத்து இன்றும் விவாதம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
அவர்கள் (எதிர்க்கட்சியினர்) நேற்று ஒரு கேள்வி கேட்டனர். பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் எங்கு சென்றனர் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு எனது பதில் என்னவென்றால் உங்களின் ஆட்சியில் தலைமறைவானவர்கள் இன்று தேடி தேடி கொல்லப்படுகின்றனர். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் ‛ஆபரேஷன் மகாதேவ்' நடவடிக்கையில் அழிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி இறந்த பயங்கரவாதிகளுக்காக அழுதது. கடந்த 2008 ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ஒருநாள் காலையில் நான் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது சல்மான் குர்ஷித் (காங்கிரஸ் மூத்த தலைவர்) அழுது கொண்டிருந்தார். அதை பார்த்ததும் நான் ஏதோ மோசமான சம்பவம் நடந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் சல்மான் குர்ஷித்தோ, பட்லா ஹவுஸ் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்காக சோனியா காந்தி அழுததாக கூறினார்.
சோனியா காந்தி, வீரமரணமடைந்த மோகன் சர்மாவுக்காக (டெல்லி போலீசில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்தவர்)அழுது இருக்க வேண்டும். ஆனால் அவர் பயங்கரவாதிகளுக்காக அழுதார்'' என்று அட்டாக் செய்தார். அதாவது கடந்த 2008 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18 ம் தேதி டெல்லியில் 5 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 30 பேர் வரை இறந்தனர். பலரும் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
ஒரு வாரம் கழித்து பயங்கரவாதிகள் தெற்கு டெல்லியில் உள்ள பட்லா ஹவுஸில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன் சந்த் சர்மா தலைமையிலான டெல்லி போலீசார் அங்கு சென்றனர். அப்போது போலீசாருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது.
அதில் பயங்கரவாதிகள் அதிஃப் அமன் மற்றும் முகமது சஜித் ஆகியோர் இறந்தனர். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மோகன் சர்மாவும் இறந்தார். அதன்பிறகு சில ஆண்டுகள் கழித்து 2012 உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பேசினார். அப்போது இறந்த பயங்கரவாதிகளின் போட்டோக்களை பார்த்து சோனியா காந்தி கதறி அழுததாக கூறியிருந்தார். அதனை குறிப்பிட்டு தான் அமித்ஷா விமர்சனம் செய்தார்.
மேலும் அமித்ஷா கூறுகையில், ‛‛சல்மான் குர்ஷித்தின் இந்த பேச்சை நான் செல்போனில் சேமித்து வைத்துள்ளேன். நாளைக்கு ஒரு நேரத்தை முடிவு செய்யுங்கள். அதனை நான் இங்கு காட்டுகிறேன். மக்களும் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்'' என்று காட்டமாக கூறினார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லோக்சபாவில் அனல் பறந்தது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications