அமித்ஷா பதவி விலக வேண்டும்.. ராஜ்யசபாவில் குரலை உயர்த்தி பேசிய கார்கே.. கொந்தளித்த பாஜகவினர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ''டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை அத்துமீறி தாக்கி உள்ளது. இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில் அமித்ஷா பதவி விலக வேண்டும். அதிகாரத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தின் காரணமாக மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. மாணவர்களின் குறைகளுக்கு உண்மையான தீர்வு காண்பதை விட தனது சொந்த பதவியை பாதுகாத்துக்கொள்வதே அரசின் அடிப்படை நோக்கமாக இருந்தது'' என்று ராஜ்யசபாவில் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக பேசியதால் பாஜக எம்பிக்களும், காங்கிரஸ் எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

amit-shah-seeks-apologies-or-resigns-says-mallikarjun-kharge-on-the-row-of-lathi-charge-in-delhi-pr

வினாத்தாள் கசிவில் ஈடுபடும் நபர்களுக்கான அதிகப்பட்ச தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில் மத்திய அரசு 'பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) திருத்த மசோதா 2026யை கொண்டு வந்தது. இந்த மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. மசோதாவை இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மசோதாவை ராஜ்யசபாவில் தாக்கல் செய்த பிறகு அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசும்போது கூறுகையில், ''வினாத்தாள் கசிவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தண்டனையை கடுமையாக்கி விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் நிறைவேற்றுவதற்காக இந்த மசோதாவை தாக்கல் செய்கிறேன்.
நம் நாட்டின் எதிர்காலமான மாணவர்களுக்காக இந்த மசோதா சீர்த்திருத்தம் செய்யப்பட உள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேசிய அளவிலான தேர்வு அமைப்பின் தேவை இருந்தும் அதனை செய்யவில்லை. 2014ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் அதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தேர்வு வினாத்தாள் கசிவை தடுப்பதற்கான குழுவின் பரிந்துரைகளை ஐக்கிய முற்போக்கு ஏற்கவில்லை.

இந்த கூட்டணி விட்டு சென்ற பணியை தற்போதைய அரசு முடிக்க வேண்டி உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நடந்த தேர்வு வினாத்தாள் கசிவுகள் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு நன்கு தெரியும். இப்போது அவர்கள் தான் ஆவேசம் காட்டுகின்றனர்'' என்று காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தார்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே எழுந்து ஆக்ரோஷமாக பேசினார். அப்போது அவர், ''டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை அத்துமீறி தாக்கி .ள்ளது. இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும். இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் குறித்து அவர் ஏன் மவுனமாக இருக்கிறார்? அவர் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில் அமித்ஷா பதவி விலக வேண்டும்.

அதிகாரத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தின் காரணமாக மாணவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. மாணவர்களின் குறைகளுக்கு உண்மையான தீர்வு காண்பதை விட தனது சொந்த பதவியை பாதுகாத்துக்கொள்வதே அரசின் அடிப்படை நோக்கமாக இருந்தது'' என்று ஆக்ரோஷமாக பேசினார். இதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராஜ்யசபாவில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி எம்பிக்களும், பாஜக ம்பிக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+