டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உள்துறை அமைச்சர் அமித் ஷா குணமடைந்தார் - எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்

எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அமித் ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Google Oneindia Tamil News

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல் நலம் பூரண குணமடைந்ததை அடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனாவிலிருந்து குணமடைந்த அமைச்சர் அமித் ஷா உடல்நலக் குறைவால் ஆகஸ்ட் 18ல் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீராகியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத கால மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

AmitShah recovers after post-COVID care discharged from AIIMS

ஆகஸ்ட் 14ம் தேதி மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் வீடு திரும்பினார் . ஆனால் அவர் மீண்டும் உடல்நல பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமித் ஷாவிற்கு மீண்டும் உடல் சோர்வு மற்றும் உடல் வலி இருந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தமிழகத்தில் மேலும் 6,495 பேருக்கு கொரோனா; 6,406 பேர் டிஸ்சார்ஜ்; 94 பேர் உயிரிழப்பு தமிழகத்தில் மேலும் 6,495 பேருக்கு கொரோனா; 6,406 பேர் டிஸ்சார்ஜ்; 94 பேர் உயிரிழப்பு

மருத்துவர்களின் தொடர் சிகிச்சை காரணமாக அமித் ஷாவின் உடல்நலம் சீரடைந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே தன் பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், அமித் ஷா பூரணமாக குணமடைந்ததையடுத்து, இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஒரு மாத கால சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

English summary
AmitShah, who was admitted to Aiims Hospital, was discharged. AmitShah, who recovered from Corona, was treated at Aiims Hospital, Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X