எலன் மஸ்க், பெசோஸை பின்னுக்குத் தள்ளி.. 2021ம் ஆண்டில் உலகில் அதிக பணம் ஈட்டுவதில் அதானி முதலிடம்
டெல்லி: உலக பணக்கார்களான எலன் மஸ்க், பெசோஸ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 2021ம் ஆணடில் அதிக பணம் ஈட்டுவதில் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ப்ளூர்பெர்க் பொருளாதார இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உலகின் நம்பர்-1 பணக்காரராக முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் டெஸ்லா கார் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், 2021ல் அதிக பணம் சம்பாதித்தவர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பெசோஸ், மஸ்க்கை பின்னுக்கு தள்ளி நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கௌதம் அதானி.

உலகில் முதலிடம்
முதல் தலைமுறை தொழிலதிபரான கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 2021ம் ஆண்டில் மட்டும் 1.17 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. அவரது மொத்த சொத்து மதிப்பு 3.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இதன் மூலம், அவர் உலகளவில் இந்தாண்டின் மிகப்பெரிய அளவில் பணம் சம்பாதித்தவராக முதலிடத்தை பிடித்துள்ளார்.

மஸ்க் வருமானம்
இந்த கால கட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் ஆன்லைன் வணிகம் செய்து வரும் அமேசான் நிறுவனர் பெசோஸ் 55 ஆயிரம் கோடியும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் 74 ஆயிரம் கோடியும் சம்பாதித்து உள்ளார்கள். ஆசியாவின் நம்பர்-1 பணக்காரரான ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி 58 ஆயிரம் கோடி மட்டுமே சம்பாதித்துள்ளார்.

பங்குகள் உயர்வு
கடந்த ஓராண்டில் அதானி குழும பங்குகள் அனைத்து 50 சதவீத வளர்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக, அதானி டோட்டல் 96%, அதானி எண்டர்பிரைசர்ஸ் 90%, அதானி டிரான்ஸ்மிஷன் 79%, அதானி பவர் - அதானி போர்ட்ஸ் ஆகிய இரண்டும் 52 % அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. அதானி குழுமம் இந்தியாவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், டேட்டா சென்டர்கள் மற்றும் நிலக்கரி சுரங்க தொழில்களில் மிகப்பெரிய ஜாம்பவனாக உருவெடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க தொழிலில் ஈடுபடும் திட்டத்தை விரைவுப்படுத்தி வருகின்றது.

அதானி யார்
யார் இந்த கௌதம் அதானி, மும்பையி்ல கடந்த 1980களில் வைர தொழிலில் கால் பதித்த குஜராத்தை சேர்ந் தொழிலதிபர் கெளவுதம் அதானி அதில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து ஊருக்கு திரும்பிய அதானி தனது சகோதருடன் சேர்ந்து பிளாஸ்டிக் இறக்குமதி தொழில் ஈடுபட்டார். 1988ஆம் ஆண்டு அதானி எண்டர்பிரைஸஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அடுத்த பத்து வருடங்களில் முந்த்ராவில் தனி துறைமுகத்தை உருவாக்கினார். தற்போது இந்தியாவின் பெரிய தனியார் துறைமுகங்களைக் கொண்ட நிறுவனமாக அதானி குழுமம் வளர்ந்துள்ளது.

1.2லட்சம் கோடி உயர்வு
இதனிடையே அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது குறித்த செய்தியை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, '2020ம் ஆண்டில் உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு அதிகரித்தது? பூஜ்ஜியம். நீங்கள் வாழவே சிரமப்பட்ட நிலையில், அதானி ரூ.1.2 லட்சம் கோடி சம்பாதித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அது, எப்படி என்று எனக்கு சொல்ல முடியுமா?' என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications