டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீர்.. பொது சிவில் சட்டம்.. ராமர் கோவில்.. பாஜக ஃபோகஸ் செய்த 4 முக்கிய விஷயங்கள்!

பாஜக கட்சியின் லோக்சபா தேர்தல் அறிக்கையில் பாதுகாப்பு , மதம் தொடர்பான பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Manifesto: இந்த 4 அம்சங்கள்தான் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் முக்கியமானது- வீடியோ

    டெல்லி: பாஜக கட்சியின் லோக்சபா தேர்தல் அறிக்கையில் பாதுகாப்பு , மதம் தொடர்பான பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி இன்று டெல்லியில் வெளியிட்டுள்ளது. சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

    பாஜக தேர்தல் அறிக்கையில் பின்வரும் நான்கு முக்கிய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    பொது சிவில் சட்டம்

    பொது சிவில் சட்டம்

    பாஜக தனது அறிக்கையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. அனைத்து மதத்திற்கும், அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வரப்படும். 1949-ல் நேருவின் அமைச்சரவை இருந்தபோது பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் இஸ்லாமியர்கள் இதை தொடர்ந்து எதிர்த்து வந்தனர். தற்போது இதை நிறைவேற்ற போவதாக பாஜக கூறியுள்ளது .

     ராமர் கோவில், விவசாயிகளுக்கு பென்சன்.. 75 வாக்குறுதிகளோடு பாஜக தேர்தல் அறிக்கை ! ராமர் கோவில், விவசாயிகளுக்கு பென்சன்.. 75 வாக்குறுதிகளோடு பாஜக தேர்தல் அறிக்கை !

    குடியுரிமை திருத்த மசோதா

    குடியுரிமை திருத்த மசோதா

    குடியுரிமை (திருத்தம்) 2016 சட்டம் நிறைவேற்றப்படும் என்று பாஜக கூறியுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தில், வெளிநாடுகளில் இருந்து 2014, மார்ச் 31ம் தேதி வரை குடியேறியுள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்கள் 7 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்தால் இந்திய குடிமகன்களாக்கப்படுவார்கள்.

    ராமர் கோவில்

    ராமர் கோவில்

    ராமர் கோவில் கட்டப்படும் என்று பாஜக கூறியுள்ளது. இந்த நிலைப்பாட்டில் இருந்து நாங்கள் மாறவில்லை என்று பாஜக கூறியுள்ளது . அதே சமயம் கோவில் சட்டத்திற்கு உட்பட்டு கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    35ஏ சட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் 35ஏ சட்டப்பிரிவு நீக்கப்படும் என்று பாஜக கூறியுள்ளது. இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மட்டும் சிறப்பு அதிகாரம் கொண்ட மாநிலம் ஆகும். இங்கு உள்ள 35ஏ சட்டப்பிரிவு அம்மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரங்களை அளிக்கிறது. இந்தியாவில் பிற பகுதிகளில் இல்லாத சட்டங்களை அங்கு கொண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    BJP mainly focuses on following these 4 issues in their manifesto released today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X