BJP Manifesto: இன்று வெளியாகும் பாஜக தேர்தல் அறிக்கை- வீடியோ
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக கட்சி இன்று டெல்லியில் வெளியிட்டுள்ளது. சங்கல்ப் பத்ரா என்று இந்த தேர்தல் அறிக்கைக்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் நியாய் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கைக்கு பதிலடியாக இன்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை ஆகும் இது. பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் அறிக்கையை வெளியிட்டனர்.
Apr 08, 2019, 1:03 pm IST
நீட் தேர்வு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாத பாஜக
விவசாயக் கடன் தள்ளுபடியிலும் ஏமாற்றத்தை அளித்த பாஜக தேர்தல் அறிக்கை
Apr 08, 2019, 12:56 pm IST
பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிப்போம் - மோடி
சபரிமலை பாரம்பரியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம்
Apr 08, 2019, 12:54 pm IST
எங்கள் தேர்தல் அறிக்கையில் 75 முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருக்கிறது
சரியான நேர இடைவெளியில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்
''ஒரே கோரிக்கை-ஒரே வழி'' என்பதுதான் எங்கள் வாக்குறுதியின் நோக்கம்
Apr 08, 2019, 12:48 pm IST
பாஜக தேர்தல் அறிக்கை: பிரதமர் மோடி உரை
Apr 08, 2019, 12:42 pm IST
பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்படும் - பாஜக தேர்தல் அறிக்கை
Apr 08, 2019, 12:30 pm IST
பாஜக தேர்தல் அறிக்கையில் மூன்று முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம்
பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்படும்
ராமர் கோவில் சட்டத்திற்கு உட்பட்டு கட்டப்படும் - பாஜக அறிக்கை
Apr 08, 2019, 12:19 pm IST
விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்டு வழங்கப்படும்
2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும்
சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
Apr 08, 2019, 12:16 pm IST
5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்
கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 25 லட்சம் கோடி ஒதுக்கப்படும்
பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
Apr 08, 2019, 12:15 pm IST
விவசாய கடனுக்கு வட்டி கிடையாது- பாஜக வாக்குறுதி
Apr 08, 2019, 12:14 pm IST
பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
தீவிரவாதத்தை ஒழிக்கும் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும்
தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பாஜக செய்யும் - ராஜ்நாத் சிங்
Apr 08, 2019, 12:03 pm IST
48 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது
பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் அறிக்கையை வெளியிட்டனர்