டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜனாதிபதி தேர்தல் ரேஸ்! முன்னணியில் திரௌபதி முர்மு! இத்தனை லட்சம் வாக்குகள் இவருக்கு இருக்கா?

Google Oneindia Tamil News

டெல்லி : தற்போதைய சூழல் படி பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கே ஆதரவும், வெற்றி வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. மேலும் தற்போது பிஜு ஜனதா தளம், பாமக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திரவுபதி முர்மு வெற்றி வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார்.

இந்தியாவின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

எடப்பாடி பழனிசாமிக்கு 4 பி.எஸ்.ஓ.க்கள்! பாதுகாப்பு அதிகரிப்பு! கிட்ட நெருங்க முடியாது! எடப்பாடி பழனிசாமிக்கு 4 பி.எஸ்.ஓ.க்கள்! பாதுகாப்பு அதிகரிப்பு! கிட்ட நெருங்க முடியாது!

பலகட்ட ஆலோசனைகள் இழுபறிக்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக பாஜகவிலிருந்து விலகி திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்றுமுன் தினம் யஷ்வந்த் சின்ஹா விலகினார்.

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல்

இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை கடந்த இரு நாட்களுக்கு முன்னர் அக்கட்சி தலைமை அறிவித்தது பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி. ஒடிசாவை பூர்விகமாகக் கொண்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரௌபதி முர்மு பாஜக சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் பிற கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரவுள்ளார். முன்னதாகவே பாஜக தலைவர்கள் அவருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

 திரௌபதி முர்மு பாஜக

திரௌபதி முர்மு பாஜக

தற்போதைய சூழல் படி பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கே ஆதரவும், வெற்றி வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. காரணம் எதிர்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு 17 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சிரோமனி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதில் தாமதம் காட்டுகின்றன. அப்படியே கொடுத்தாலும் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை.

வாக்கு மதிப்பு

வாக்கு மதிப்பு

தற்போதுள்ள நிலையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 700. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் 10 லட்சத்து 79 ஆயிரத்து 394 வாக்குகள் பதிவாக இருக்கின்றன.

பாஜக வாக்கு சதவீதம்

பாஜக வாக்கு சதவீதம்

மக்களவையில் 3 லட்சத்து 78 ஆயிரம் வாக்குகளும், மாநிலங்களவையில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 600 வாக்குகளும், சட்டமன்ற உறுப்பினர்களில் 5 லட்சத்து 41 ஆயிரத்து 794 வாக்குகள் பதிவாக இருக்கின்றன. பாஜக கூட்டணியில் மக்களவையில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 800 வாக்குகளும், மாநிலங்களவையில் 70 2800 வாக்குகளும் சட்டமன்றத்தில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 668 வாக்குகள் என மொத்தம் 5 லட்சத்து 25 ஆயிரத்து 768 வாக்குகள் உள்ளன. வாக்கு சதவீத அடிப்படையில் இது 48.66 % ஆகும்.

பல கட்சிகள் ஆதரவு

பல கட்சிகள் ஆதரவு

காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ கூட்டணியில் மக்களவையில் 77 ஆயிரம் வாக்குகளும் மாநிலங்களவையில் 37 ஆயிரத்து 100 வாக்குகள், சட்ட மன்றங்களில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 990 வாக்குகள் என மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 90 வாக்குகள் உள்ளது. இது 24.19 % ஆகும். பிற கட்சிகளுக்கு மக்களவையில் 67 ஆயிரத்து 200 வாக்குகள், மாநிலங்களவையில் 49 ஆயிரத்து 700 வாக்குகள், சட்ட மன்றங்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 136 வாக்குகள் என மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 36 வாக்குகள் உள்ளன. இது மொத்தம் 27.15 % ஆகும். தற்போது பிஜு ஜனதா தளம், பாமக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திரவுபதி முர்மு வெற்றி வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார்.

English summary
In the current scenario, there are reports that Draupadi Murmu, who has been declared the BJP's presidential candidate, has the support and the chance to win.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X