டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெறும் கையோடு திரும்பி வந்த அமைச்சர்.. பாஜக மூத்த அமைச்சரை சீண்டும் சு.சாமி.. யாரை சொல்கிறார்?

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக அமைச்சர் ஒருவர் தீவு ஒன்றுக்கு பயணம் மேற்கொண்டுவிட்டு வெறும் கையோடு திரும்பி வந்துவிட்டதாக பாஜக ராஜ்ய சபா எம்பி சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும் எம்பியுமான சுப்பிரமணியன் சாமி கடந்த சில நாட்களாக பாஜக குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து கடுமையான கருத்துக்களை சுப்பிரமணியன் சாமி தெரிவித்து வரும் நிலையில் அவர் பாஜகவில் இருந்து வெளியேறுகிறாரோ என்ற கேள்வியும் கூட எழுந்துள்ளது.

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை.. தந்தையை இழந்து தவிக்கும் 3 குந்தைகள் திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை.. தந்தையை இழந்து தவிக்கும் 3 குந்தைகள்

சமீபத்தில் சுப்பிரமணியன் சாமி செய்திருந்த ட்வீட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.

மோடி

மோடி

பிரதமர் மோடி அரசின் ரிப்போர்ட் கார்ட்.. நிதி நிலை - தோல்வி, வெளியுறவுத்துறை - தோல்வி, தேசிய பாதுகாப்பு - பீகாஸஸ் தோல்வி, எல்லை பாதுகாப்பு - சீனா ஊடுருவலால் தோல்வி, உள்நாட்டு பாதுகாப்பு - காஷ்மீரில் தோல்வி என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

அதோடு சமீபத்தில் மம்தா பானர்ஜியை சுப்பிரமணியன் சாமி பாராட்டி இருந்ததும் வைரலானது. அதன்படி மொரார்ஜி தேசாய், ஜெபி, ராஜிவ் காந்தி, சந்திரசேகர், நரசிம்ம ராவ் போன்று சொன்னதை செய்ய கூடிய தலைவர்தான் மம்தா பானர்ஜி. இந்த காலத்தில் இந்திய அரசியலில் இப்படி ஒரு தலைவர் இருப்பது கடினம் என்று மம்தா குறித்து சுப்பிரமணியன் சாமி பாராட்டி இருந்தார்.

சு. சாமி

சு. சாமி

இதனால் சுப்பிரமணியன் சாமி பாஜகவில் இருந்து வெளியேறுகிறாரோ என்ற கேள்வியும் எழுந்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டு திரும்பியது குறித்து பாஜக ராஜ்ய சபா எம்பி சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார். ஜெய்சங்கர் குறித்து பெயரை குறிப்பிடாமல் சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்துள்ளார்.

ட்வீட்

ட்வீட்

அதில், நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், ஜெஎன்யூவில் பயிற்சி பெற்று, வெளியுறவுத்துறையில் ஆட்சிப்பணி அதிகாரியாக இருந்துவிட்டு அமைச்சரானவர் தற்போது சிங்கபூர் போன்ற சிறிய தீவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு 8 அமைச்சர்களை சந்தித்துவிட்டு, அந்நாட்டு பிரதமரையும் சந்தித்துவிட்டு வெறும் கையோடு திரும்பி வந்துள்ளார். அடுத்து என்ன சீஷெல்ஸ் தீவிற்கு சொல்கிறாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

விமர்சனம்

விமர்சனம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு வாரங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்றதை இப்படி மறைமுகமாக சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்ததாக கமெண்டில் பலர் குறிப்பிட்டுள்ளனர். சிங்கப்பூர் சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு சிங்கப்பூர் பிரஹ்மர் லீ ஹெய்சின் லுக்கையும், அமைச்சர்கள் தர்மன், ஆங் ஏ குங், விவியன் பாலகிருஷ்ணன், எங் எங் ஹென், காசிவிஸ்வநாதன் சண்முகன் ஆகியோரை சந்தித்தார். இதைத்தான் மறைமுகமாக சுப்பிரமணியன் சாமி விமர்சனம் செய்ததாக கமெண்ட்டில் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

English summary
BJP Subramanian Swamy pulls the legs of Minister Jai Shankar in Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X