இந்த 7 மாநிலங்களில் 106 தொகுதிகளையுமே மொத்தமாக அள்ளுமாம் பாஜக; காங்கிரஸ், ஆம் ஆத்மிக்கு 0- India TV

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தலில் டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களின் மொத்தம் 106 தொகுதிகளையும் அப்படியே பாஜக கைப்பற்றும் என்கிறது India TV கருத்து கணிப்பு.

நாட்டின் 18-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஜூன் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

BJP to get sweep in 106 seats of 7 North Indian States India TV Survey

லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக 543 தொகுதிகளிலும் India TV கருத்து கணிப்பு நடத்தியது. இக்கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிதான் மத்தியில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட இந்திய மாநிலங்களில் 7-ல் உள்ள மொத்தம் 106 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அப்படியே பாஜக கைப்பற்றிவிடும் என்கிறது இந்த கருத்து கணிப்பு.

அதாவது.

குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள்

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 29 தொகுதிகள்

ராஜஸ்தானில் மொத்தம் 25 தொகுதிகள்

ஹரியானாவில் மொத்தம் 10 தொகுதிகள்

டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகள்

உத்தரகாண்ட்டில் மொத்தம் 5 தொகுதிகள்

ஹிமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 4 தொகுதிகள்

என 106 தொகுதிகளில் பாஜக மட்டும்தான் வெல்லும் என்கிறது இந்த கருத்து கணிப்பு. இம்மாநிலங்களில் பாஜகவுக்கு பிரதான போட்டியாளராக இருப்பது காங்கிரஸ். டெல்லியில் ஆம் ஆத்மி. இந்த இரு கட்சிகளுக்குமே 106 தொகுதிகளில் ஒரு இடம் கூட கிடைக்காது என்பதுதான் இந்த கருத்து கணிப்பின் முடிவுகள்.

உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இங்கும் 73 இடங்களில் பாஜக வெல்லும். பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஆஎல்டி 2, அப்னா தள் 2 இடங்களில் வெற்றி பெறுமாம். எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு 3 இடங்கள்தான் கிடைக்குமாம். காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு உ.பி.யில் ஒரு இடம் கூட கிடைக்காது என்கிறது India TV கருத்து கணிப்பு.

India TV கருத்து கணிப்பின் படிநாடு தழுவிய அடிப்படையில் கட்சிகளின் வெற்றி எதிர்பார்ப்பு:

பாஜக BJP 342
காங்கிரஸ் 38
திரிணாமுல் காங்கிரஸ் 19
திமுக் 18
ஜேடியூ 14
தெலுங்குதேசம் 12
பிஜூ ஜனதா தளம் 11
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 10
ஆம் ஆத்மி 6
அதிமுக 4
சமாஜ்வாதி கட்சி 3
தேசிய மாநாட்டு கட்சி 3
பிஆர்எஸ்- 2
பாமக -1
மஜ்லிஸ் கட்சி- 1

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+