’ஆப்ரேசன் லோட்டஸ் 144’ 2024 தேர்தலில் பாஜக போடும் ‘மாஸ்டர் ப்ளான்’! மொத்தமாய் களமிறங்கும் சீனியர்கள்
டெல்லி : வருகிற மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும் முனைப்பில் இருக்கும் பாஜக, கடந்த எதிர்கட்சிகள் மற்றும் முக்கிய தலைவர்களிடம் இருக்கும் தொகுதிகளை கைப்பற்ற 'சிறப்பு மக்களவை தொகுதிகள் 144' என்ற திட்டத்தோடு அணுக பாஜக தலைமை 40 மத்திய அமைச்சர்களை களமிறக்கவும் முடிவு செய்திருக்கிறது.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி அதன்பிறகு மன்மோகன் சிங் தலைமையில் 10 ஆண்டு காலம் ஆட்சி நடத்தியது. அதன் பிறகு குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்து ஆட்சியைப் பிடித்தது.
அதன் பிறகு நடந்த 17வது மக்களவைத் தேர்தலையும் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்ததோடு பிரதமர் நரேந்திர மோடியும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்று கொண்டார். வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

பாஜக வெற்றி
பாஜக 282 தொகுதிகளில் தனி பெரும்பான்மை பெற்றதோடு அதிமுக உள்ளிட்ட 19 கட்சிகளுடன் கூட்டணி வைத்து மொத்தமாக 353 இடங்களை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ் கட்சி அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலிலும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் சார்பில் 92 இடங்கள் பெற்ற போதிலும் இரண்டாவது முறையாக ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி தேசிய அரசியலில் பாதாளத்தை நோக்கி சென்று விட்டதாக பாஜக கூறியது.

2024 மக்களவைத் தேர்தல்
மேலும் 2014 மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் மேற்கு வங்க மாநிலத்தில் வெற்றி பெற்ற பாஜக 2019 தேர்தலில் 19 இடங்களில் கைப்பற்றியது. தமிழகம், கேரளா தவிர மற்ற மாநிலங்களில் பாஜக சிறப்பான வெற்றியை பெற்றது என்றே சொல்லலாம். பாஜக ஆட்சியமைத்து தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2024 மக்களவைத் தேர்தலை கவனத்தில் கொண்டு பல்வேறு கட்சிகள் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.

எதிர்கட்சி தொகுதிகள்
அந்த வகையில் பாஜகவும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் வசம் இருக்கும் 144 தொகுதிகளில் வெற்றி பெற வியூகம் வகுத்து வருகிறது. அதைவிட கடந்த முறை காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்தது போல ரேபரேலி தொகுதியை வைத்திருக்கும் சோனியா காந்தியை தோற்கடித்து காங்கிரஸிடம் இருந்து அதனை கைப்பற்ற வேண்டுமென பாஜக திட்டமிட்டுள்ளது.

ஆப்ரேசன் 144
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வசமுள்ள 15 தொகுதிகளையும், மகாராஷ்டிராவில் பாராமதி தொகுதி, மேற்கு வங்காளத்தில் ஜாதவ்பூர், மத்திய பிரதேசத்தில் சிந்தல வாடா உள்ளிட்ட தொகுதிகள் பாஜக கைப்பற்ற நினைக்கும் தொகுதிகளாகும். இந்த பட்டியலில் 144 தொகுதிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில் கடந்த இரண்டு மக்களவை த் தேர்தல்களிலும் பாஜக தோல்வியையே சந்தித்தது. இதை அடுத்து 'மக்களவை சிறப்பு தொகுதிகள் 144' என பட்டியில் தயார் செய்யப்பட்டு அந்த தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய வியூகம் வகுத்து கைப்பற்ற திட்டமிடப்பட்டிருக்கிறது.

புதிய வியூகம்
இந்த தொகுதிகளை வெல்வதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா, பொதுச் செயலாளர் சந்தோஷ் ஆகியோர் புதிய வியூகம் வகுத்து வருகின்றனர். இந்த தொகுதிகளை கைப்பற்றுவதற்காக 40 மத்திய அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு மூன்று முதல் நான்கு தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டு தேர்தலுக்கு 18 மாதங்கள் முன்பாகவே இந்த தொகுதிகளில் அவர்கள் முகாமிட்டு பிரச்சாரம் நடத்த இருக்கின்றனர். இந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள சில தொகுதிகளும் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் 144 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியையும் பாஜக தொடங்கி விட்டதாக கூறுகின்றனர்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications