சென்னையில் இருந்து டெல்லி சென்ற ரயிலில் இருந்த மர்ம பெட்டி.. திறந்து பார்த்தால் மனித உடல்.. ஷாக்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆக்ரா ரயில் நிலையத்தில் தமிழ்நாடு எஸ்க்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த டிராலி சூட்கேஸை திறந்து பார்த்தபோது மனித உடல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்டிக்குள் மனித உடலை வைத்துச் சென்ற நபர் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சூட்கேசில் இருந்து ரத்தம் கசிவதுடன் துர்நாற்றமும் வீசியதாக இன்று அதிகாலை 5 மணியளவில், குவாலியர் ரயில்வே அதிகாரிகள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Body Found in Suitcase on Tamil Nadu Express Train at Agra Railway Station Probe Underway

இதையடுத்து அந்த ரயில் ஆக்ரா கான்ட் ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும், ரயில்வே போலீசாரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் அந்த சூட்கேஸை கைப்பற்றி சோதனை செய்தனர். அதை திறந்து பார்த்தபோது. அதற்குள் மனித உடலின் சில பாகங்கள் இருந்தது தெரியவந்தது.

ரயிலில் இருந்த சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், உடல் பாகங்கள் சென்னை பெயர் அச்சிடப்பட்டிருந்த காகிதத்தில் சுற்றப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து விசாரணைக் குழு சென்னைக்கு விரைந்துள்ளது. இந்த சூட்கேஸ் எந்த ரயில் நிலையத்தில், யாரால் ரெயிலில் வைக்கப்பட்டது என்பதை கண்டறிய, ரயில் நின்ற அனைத்து நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+