டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலக அளவில் பெரிய நிகழ்வாக இருக்கும்.. 2022ல் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தும்.. நிர்மலா அறிவிப்பு!

2022ம் ஆண்டின் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தும் என்று பட்ஜெட் அறிவிப்பின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது - நிர்மலா சீதாராமன்

    டெல்லி: 2022ம் ஆண்டின் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தும் என்று பட்ஜெட் அறிவிப்பின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    2020-2021 நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை தற்போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

    Budget 2020: India will host G20 summit in 2022 says Finance Minister Nirmala

    இந்த அறிவிப்பில் பொருளாதாரம், இணையம், விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 2022ம் ஆண்டின் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தும். இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கு 100 கோடி ரூபாய் செலவு செய்யப்படும், இது உலக அளவில் பெரிய நிகழ்வாக இருக்கும், என்று பட்ஜெட் அறிவிப்பின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    ஜி20 என்பது 20 உலக நாடுகள் மற்றும் அந்நாட்டு நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டமைப்பாகும். இதில் உலகின் பெரும்பாலான வல்லரசு நாடுகள் உள்ளது. அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா.

    நாடு முழுக்க பைபர் ஆப்டிக்ஸ்.. வருகிறது ஏஐ.. 'டெக்கி' கிராமங்களை உருவாக்க நிர்மலா அசத்தல் அறிவிப்பு!நாடு முழுக்க பைபர் ஆப்டிக்ஸ்.. வருகிறது ஏஐ.. 'டெக்கி' கிராமங்களை உருவாக்க நிர்மலா அசத்தல் அறிவிப்பு!

    இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ன‌ இணைந்த‌ கூட்டமைப்பு ஆகும்.

    ஜி-20 பொருளாதாரம் மொத்த உலக உற்பத்தியில் 85% ஆகும். இந்த நிலையில் இந்த மாபெரும் நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டைதான் மத்திய அரசு நடத்த உள்ளது. வரும் 2022ம் வருடம் இதை இந்தியா நடத்த உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

    English summary
    Budget 2020: India will host G20 summit in 2022 says Finance Minister Nirmala Sitharaman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X