டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 முக்கியமான விஷயத்தை மனதில் வைத்தே பட்ஜெட்டை உருவாக்கினேன்.. விளக்கிய நிர்மலா.. என்ன தெரியுமா?

3 முக்கியமான விஷயங்களை மனதில் கொண்டுதான் இந்தியாவின் 2020 பட்ஜெட்டை உருவாக்கியதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இருக்கிறது - நிர்மலா சீதாராமன்

    டெல்லி: 3 முக்கியமான விஷயங்களை மனதில் கொண்டுதான் இந்தியாவின் 2020 பட்ஜெட்டை உருவாக்கியதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நிறைய சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை தற்போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

    அதே சிவப்பு துணி.. மாமியார் உருவாக்கியது.. சிறப்பு பூஜை செய்து கொண்டு வந்த நிர்மலா சீதாராமன்!அதே சிவப்பு துணி.. மாமியார் உருவாக்கியது.. சிறப்பு பூஜை செய்து கொண்டு வந்த நிர்மலா சீதாராமன்!

    மத்திய அரசு

    மத்திய அரசு

    நிர்மலா சீதாராமன் தனது உரையில், மத்திய அரசு தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட் காரணமாக வருமானம் அதிகரிக்கும். மக்கள் கையில் அதிகம் பணம் புழங்கும். மக்கள் வாழ்க்கை தரம் உயரும். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவில் மக்கள் இடையே பணிவும், பற்றுதலும் அதிகம் ஆகியுள்ளது. மக்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை நம்புகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையில் புதிதாக 15 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

    ஜிஎஸ்டி எப்படி

    ஜிஎஸ்டி எப்படி

    ஜிஎஸ்டி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. ஜிஎஸ்டி காரணமாக நடுத்தர குடும்பங்களில் பட்ஜெட் செலவு 4% வரை குறைந்துள்ளது. ஏழைகள் நேரடியாக பலனடையும் வகையில் பல புதிய வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஏப்ரல் 2020ல் அமல்படுத்தப்படும் . தற்போது வரை 4 கோடி பேர் புதிதாக வரிக்கணக்கு செலுத்தி உள்ளனர். துடிப்பான பொருளாதாரத்தை நோக்கி நகரத்து வருகிறது.

    இந்திய ஜிடிபி

    இந்திய ஜிடிபி

    இந்திய ஜிடிபியில் நாட்டின் கடன் 52%ல் இருந்து 48 சதவிகிதமாக் குறைந்துள்ளது. எல்லோருக்கும் முன்னுரிமை அளிப்பதே இந்த பட்ஜெட்டின் நோக்கம். தலித் & பழங்குடியினத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பெண்களுக்கும், சமூகத்தின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஒவ்வொரு நபருக்கும், இந்த பட்ஜெட் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதாக அமையும். நம் நாட்டு மக்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும். தங்களுக்கு பிடித்த தொழிலை செய்ய வேண்டும்.

    பணத்தட்டுப்பாடு

    பணத்தட்டுப்பாடு

    இந்த பட்ஜெட் மூலம் பண தட்டுப்பாடு, நிதி பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும். இந்த பட்ஜெட் மூன்று விஷயங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. 1. ஆர்வமிக்க இந்தியா, 2. பொருளாதார வளர்ச்சி மற்றும் 3. அக்கறையுள்ள சமூகம் ஆகிய மூன்று விஷயங்களை மையமாக வைத்து இந்த பட்ஜெட்டை உருவாக்கினேன். நாம் இந்த சமுதாயம் குறித்து கவனம் கொள்ள வேண்டும். அதற்கு இந்த பட்ஜெட் உதவும், என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Budget 2020: Indian budget created based on Three important things says Finance Minister Nirmala Sitharaman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X