டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Budget 2022: வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கு புதிய திட்டம், பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி : வடகிழக்கு மாநிலங்களில் வளர்சிக்காக பிரதமர் அபிவிருத்தி முன்னெடுப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின் போது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று 2022- 2023 மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். முன்னதாக இளைஞர்கள், பெண்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Budget 2022 A new scheme called PM Development Initiatives for North East to be launched FM Nirmala Announced

தொடர்ந்து தனது பட்ஜெட் உரையில் பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் வட கிழங்கு மாநிலங்களின் வளர்சிக்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லை செல்கிறது. மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த எல்லையின் மேற்குப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பகுதியில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மற்றும் கிழக்குப் பகுதியில் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடம் பெற்றுள்ளன.

இளைஞர்கள், பெண்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் பெருமிதம் இளைஞர்கள், பெண்கள், ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்

இருப்பினும், இரு நாடுகளும் இன்னும் முழுமையாக எல்லைகளை வரையறுக்கவில்லை. ஏனென்றால் பல பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தகராறு நீடிக்கிறது. எல்லைத் தகராறு காரணமாகவும் பல்வேறு அரசியல் சூழ்நிலை காரணமாகவும் வடகிழக்கு மாநிலங்கள் பின் தங்கியே உள்ளது. இந்நிலையில் அந்த மாநிலங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

Recommended Video

    Union Budget 2022 நிறைகள், குறைகள் | Ramasubramanian | Oneindia Tamil

    இதுகுறித்து பட்ஜெட் உரையின் போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வடகிழக்கு மாநிலங்களில் வளர்சிக்காக பிரதமர் அபிவிருத்தி முன்னெடுப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார். இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள கிராமங்களின் வளர்ச்சியை மேம்படுத்த புதிய துடிப்பான கிராம திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

    English summary
    Union Minister Nirmala Sitharaman has issued a new announcement during her budget speech that the Prime Minister's Development Plan for Development in the North Eastern States will be implemented.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X