வரலாறு காணாத அளவு உயர்ந்த விமான எரிபொருள் விலை.. விமான பயண கட்டணங்கள் உயருகிறது
டெல்லி: விமான எஞ்சின் எரிபொருள் விலை 8.5 சதவீதம் வரை வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், விமான போக்குவரத்து கட்டணமும் உயரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலையைப் போலவே விமான போக்குவரத்துக்கு பயன்படும் ஏவியேசன் டர்பைன் ஃப்யூல் எனப்படும் விமான போக்குவத்து எரிபொருளின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக விமான எரிபொருளின் விலை மாற்றமில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் விமான எரிபொருளின் விலை உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. விமான எரிபொருள் விலையை 8.5 சதவீதம் உயர்த்திய அரசு, விமான கட்டணமும் விரைவில் அதிகரிக்கலாம் என அறிவித்தது. அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனமும், ஏவியேசன் டர்பைன் ஃப்யூல் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.
இதன்படி விமான எரிபொருளின் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.6743 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் புதிய விலையில் ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் 86308.16 ரூபாயாக உள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விமான டிக்கெட் விலையில் கணிசமான தொகை விமான எரிபொருள் வரிக்கு செல்லும் என்பதால், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு கட்டணத்தை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுவரை எந்த ஒரு விமான நிறுவனத்திலிருந்தும் முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications