ஆபரேஷன் கமலாவின் "மாஸ்டர்மைன்ட்".. மன்னர் குடும்ப வாரிசு.. சிந்தியாவிற்கு அமைச்சர் பதவி பார்சல்!
டெல்லி: மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்று கடந்த ஒன்றரை வருடங்களாக கடுமையாக முயற்சி செய்து கொண்டு இருந்த ஜோதிராத்திய சிந்தியாவிற்கு பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று வெளியான புதிய அமைச்சரவை லிஸ்டில் இவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஹவுஸ் ஆப் சிந்தியா எனப்படும் குவாலியர் பகுதியை ஆண்ட சிறு மன்னர் குடும்பத்தின் வாரிசுதான் ஜோதிராத்திய சிந்தியா. மத்திய பிரதேசத்தில் வலுவான அரசியல் குடும்பம் ஜோதிராத்திய சிந்தியாவுடையது. எப்போதும் அதிகாரத்தில் இருந்து பழகிய குடும்பம் இவருடையது.
2001ல் அப்பா மாதவ்ராவ் சிந்தியா எம்பியாக இருக்கும் போது விமான விபத்தில் பலியானார். இதனால் அதே வருடம் ஜோதிராத்திய சிந்தியா அரசியலில் நுழைந்து, காங்கிரஸ் சார்பாக அப்பாவின் குணா தொகுதியில் போட்டியிட்டு லோக்சபா எம்பியானார்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியில் கடந்த 20 வருடங்களாக மிக முக்கியமான உறுப்பினராக மதிக்கப்பட்டவர் ஜோதிராத்திய சிந்தியா. காங்கிரசின் அடுத்த தலைவர் ரேசில் இருந்தவர். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவரின் அமைச்சரவையில் பல்வேறு இணை அமைச்சர் பொறுப்புகளை வகித்து இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டசபை தேர்தலின் போது எம்எல்ஏவாக தேர்வானார். அப்போது மத்திய பிரதேச முதல்வர் பதவி இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்
இவருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் கமல் நாத்திற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. கடைசியில் ராகுல் காந்தி கமல் நாத்தை முதல்வராக தேர்வு செய்தார். முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்த ஜோதிராத்திய சிந்தியா கட்சி மாறுவதற்கு தயாராகிக்கொண்டு இருந்தார். நேரம் பார்த்து, கடந்த வருடம் மகாராஷ்டிராவில் பாஜகவுடன் இணைந்து ஜோதிராத்திய சிந்தியா காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தார்.

20 வருடம்
20 வருடமாக காங்கிரஸ் உடன் இருந்த உறவை துண்டித்துவிட்டு 22 எம்எல்ஏக்களுடன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கமல்நாத் ஆட்சியை ஜோதிராத்திய சிந்தியா கவிழ்த்தார். ஆபரேஷன் கமலாவை மத்திய பிரதேசத்தில் வெற்றிகரமாக ஜோதிராத்திய சிந்தியா நடத்தி காட்டினார். அப்போது ஜோதிராத்திய சிந்தியா இடைத்தேர்தலில் நிற்க வைக்கப்பட்டு மத்திய பிரதேச முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமைச்சர்
ஆனால் மாறாக ஜூன் 20ம் தேதி ராஜ்ய சபா எம்பியாக பாஜக இவரை தேர்வு செய்தது. அப்போதே ஜோதிராத்திய சிந்தியாவிற்கு முக்கிய அமைச்சரவை பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சரவை விரிவாக்கத்திற்காக அவர் காக்க வைக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது மன்னர்குடும்பத்தின் வாரிசுக்கு அமைச்சர் பதவி ஒருவழியாக கிடைத்துள்ளது.

அரசியல்
அரசியல், குடும்பம் தாண்டி கல்வி ரீதியாக ஜோதிராத்திய சிந்தியா நல்ல பின்புலம் கொண்டவர். ஹார்டுவர்டு பல்கலையில் இவர் இளங்கலை படித்துள்ளார். அதேபோல் ஸ்டான்போர்ட் பிசினஸ் கல்லூரியில் அமெரிக்காவில் படித்து இருக்கிறார். அமைச்சராகி இருக்கும் ஜோதிராத்திய சிந்தியாவிற்கு முக்கியமான துறை ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications