40 ஆண்டுகள்..சாதாரண தொண்டர் டூ கேபினெட் அமைச்சர்.. சிலிர்க்க வைக்கும் கிஷன் ரெட்டியின் அரசியல் பயணம்
டெல்லி: 1980களில் ஜனதா கட்சியில் சாதாரண தொண்டராகச் சேர்ந்த ஜி கிஷன் ரெட்டி தற்போது மோடி அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜி கிஷன் ரெட்டி என்ற இவரது முழு பெயர் கங்காபுரம் கிஷன் ரெட்டி. இவர் கடந்த 1980களில் ஜனதா கட்சியில் சாதாரண தொண்டராகத் தன்னை தானே இணைத்துக் கொண்டார். அதன் பிறகுத் தனது உழைப்பின் மூலம் படிப்படியாகக் கட்சியில் உயர்ந்தார்.

1980களிலேயே ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சாவின் மாநிலப் பொருளாளராக ஆனார். 2002 முதல் 2005 வரை, பாரதீய ஜனதா யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2004ஆம் ஆண்டு ஹிமாயத்நகர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பாஜகவின் சட்டசபை தலைவராகவும் கிஷான் ரெட்டி செயல்பட்டார். மேலும், தனித் தெலங்கானா கோரிக்கையை வலியுறுத்திப் போராடியவர்களில் இவரும் முக்கியமானவர்.
கடந்த 2012ஆம் ஆண்டு 22 நாட்கள் தெலுங்கானா 'போரு யாத்திரை' என்ற ஒன்றை நடத்தினார். அப்போது சுமார் 3,500 கிலோமீட்டர் பயணித்து, 986 கிராமங்கள், 88 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்த மக்களைச் சந்தித்துத் தனி தெலுங்கான கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினார்.
2019ஆம் ஆண்டு செகந்திராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்ற இவருக்கு, உள் துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளில் தற்போது இவர் கேபினெட் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications