எப்போதும் மாஸ் காட்டும் ராஜ்நாத் சிங்.. மோடி அமைச்சரவையில் இருக்கும் ஒரே வாஜ்பாய் காலத்து அமைச்சர்
டெல்லி: வாஜ்பாய் பிரதமராக இருந்த 1998-2004 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தவர்களில் ராஜ்நாத் சிங் மட்டுமே தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடியின் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல் முருகன் உள்ளிட்ட 43 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
கடந்த 2018இல் மோடி இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு மேற்கொள்ளப்படும் முதல் அமைச்சரவை விரிவாக்கம் இதுதான். அடுத்து வரவிருக்கும் தேர்தல்களையும் கருத்தில் கொண்டே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மூத்த அமைச்சர்கள் நீக்கம்
பல முக்கிய மற்றம் மூத்த அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்தியா கொரோனா 2ஆம் அலையை மிக மோசமாகக் கையாண்டதாகப் பலரும் விமர்சித்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நீக்கப்பட்டுள்ளார். கல்வித் துறை அமைச்சராக இருந்த ரமேஷ் போக்ரியால், ஐடி துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும் நீக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருந்தது.

ராஜ்நாத் சிங்
மொத்தமாக 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மூத்த அமைச்சர்களில் வெகு சிலர் மட்டுமே இந்த அமைச்சரவை மாற்றத்தில் தப்பித்தவர்கள். அவர்களில் முக்கியமானவர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 1998-2004 காலகட்டத்தில் வாஜ்பாய் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்களில் இப்போது ராஜ்நாத் சிங் மட்டுமே மோடியின் அமைச்சரவையிலும் அமைச்சராக உள்ளார்.

ஒரே அமைச்சர்
பாஜகவின் மற்ற முக்கிய அமைச்சர்களைப் போலவே இவரும் ஆஎஸ்எஸ் அமைப்பில் இருந்து வந்தவர், 13 வயது முதலே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை தானே இணைத்துக் கொண்டவர். 69 வயதாகும் ராஜ்நாத் சிங் வாஜ்பாய் ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் விவசாய துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். மேலும் 2000-2002ஆம் ஆண்டு வரை உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகவும் செயல்பட்டார். மோடியின் முதல் ஆட்சியில் 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரை உள் துறை அமைச்சராகவும் இருந்தார்

மூத்த அமைச்சர்கள்
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் உள் துறை அமைச்சரான அமித் ஷாவுக்கு கூடுதலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவுத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கூடுதலாக கார்ப்பரேட் விவகாரங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூத்த அமைச்சர்களில் ஒருவரான நிதின்கட்கரி போக்குவரத்துத் துறை அமைச்சராகத் தொடர்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications