நபிகள் நாயகம் அவதூறு.. பாஜகவில் நீக்கப்பட்ட நவீன்! வழக்குகளை டெல்லிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் ஆர்டர்
டெல்லி: நபிகள் நாயகம் மீது அவதூறாக கருத்து தெரிவித்ததற்காக நுபுர் ஷர்மாவுடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி நவீன் குமார் மீதான வழக்குகளை டெல்லி காவல்துறைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் பாஜக முன்னாள் ஊடகப்பிரிவு தலைவராக இருந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்கு பெயர் பெற்றவர்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் நுபுர் ஷர்மா கலந்துகொண்டு இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சைக்குள்ளானது.

பாஜகவிலிருந்து நீக்கம்
அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டார். நுபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டாலின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், நவீன் குமார் ஜிண்டாலை கட்சியிலிருந்தே நீக்கியது பாஜக தலைமை.

வழக்குப்பதிவு
டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, உத்தரப்பிரதேசம் என நாட்டின் பல்வேறு காவல்நிலையங்களில் நவீன் குமார் ஜிண்டால் மற்றும் நுபுர் ஷர்னா மீது இதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டனர். இது தொடர்பாக இருவருக்கு காவல்துறை சம்மன் அனுப்பவும் செய்தது. ஆனால், கைது செய்யப்படவில்லை.

நவீன் குமார் வழக்கு
இந்த நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் டெல்லி காவல்துறைக்கு மாற்றம் செய்யக்கோரியும், தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நவீன் குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் லுத்ரா ஆஜரானார்.

மத்திய அரசு வழக்கறிஞர் ஒப்புதல்
நீதிபதி ஷா அமர்வு முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் விக்ரம்ஜித் பானர்ஜி ஆஜரானார். "டெல்லியில் தெரியும் ட்விட்டர் பதிவுதான் கொல்கத்தாவிலும் தெரியும்." என்று கூறி அனைத்து வழக்குகளையும் டெல்லி காவல்துறைக்கு மாற்ற அவர் சம்மதம் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இதனை தொடர்ந்து அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதி ஷா, "நவீன் குமார் ஜிண்டால் மீது இனிமேல் எதிர்காலத்தில் தொடரப்போகும் வழக்குகளுக்கு இது பொருந்தாது. இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மட்டும் டெல்லி காவல்துறைக்கு மாற்றலாம்." என்று உத்தரவிட்டார்.

உலக நாடுகள் எதிர்ப்பு
நுபுர் ஷர்மா, நவீன் குமார் ஜிண்டாலின் சர்ச்சைக்குறிய கருத்டு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகியவை இதற்கு கண்டனம் தெரிவித்தன.

பைகாட் இந்தியா
இந்த சம்பவத்தை மையப்படுத்தி இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்!












Click it and Unblock the Notifications