சம்பா-தாளடி சாகுபடி காப்பாற்றப்படுமா? காவிரி நீர் குறித்து கர்நாடகாவுக்கு ஆணையம் முக்கிய உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மேட்டூரில் நீர் வரத்து குறைந்துள்ள நிலையில், டெல்டா விவசாயிகள் அச்சமடைந்திருக்கின்றனர். இந்நிலையில், காவிரியிலிருந்து 15 நாட்களுக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்த உத்தரவுப்படி அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இது விவசாயிகளுக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications
