நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. லட்சக்கணக்கில் கைமாறிய பணம்.. 8 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை!
டெல்லி: நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு சார்பாக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் நீட்தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடந்த இந்த தேர்வை நாடு முழுவதும் 10.72 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்தியா முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் 3,800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வின் உண்மைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டும், முறைகேடுகளை தடுக்கும் பொருட்டும், மிகக் கடுமையான நெறிமுறைகளை தேர்வு முகமை பின்பற்றி வருகிறது.
தேர்வர்கள் தேர்வு மையத்தினுள் நுழையும் முன்பு உயர் உணர்திறன் கொண்ட உலோக உணர்வி பயன்படுத்தி விரிவான கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதே போன்று, மூடப்பட்ட அறையில் பெண் அலுவலர்களைக் கொண்டு பெண் தேர்வர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அதுமட்டுமல்லாமல், தேர்வர்களுக்கு தேர்வு அறையிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் இஸ்லாமிய மாணவியிடம் ஹிஜாப், புர்கா ஆகியவற்றை நீக்கவும், மாணவிகளிடம் தீவிர உடை கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டதாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக டெல்லி மற்றும் ஹரியானாவில் ஆள் மாறாட்டம் நடைபெற்றதாக 8 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆள் மாறாட்டம் செய்வதற்காக அடையாள அட்டைகளில் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட டெல்லி மாநிலம் கவுதம் நகரைச் சேர்ந்த சுஷில் ரஞ்சன் என்பவரை கைது செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரோடு சேர்த்து ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் சிபிஐ கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் லட்சக்கணக்கில் பணம் கைமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications