டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மமதா vs சிபிஐ.. எதிர்கட்சித் தலைவர்களுக்கு போன் போட்ட சந்திரபாபு நாயுடு.. தொடங்கியது ஆலோசனை!

எதிர்கட்சித்தலைவர்களுடன் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும், சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர்களுடன் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறார்.

சிபிஐ அதிகாரிகள் 15 பேர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இன்று கொல்கத்தா கமிஷ்னர் ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய முயன்றது. தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதா ஊழல் ஆகியவற்றில் குற்றம்சாட்டி இந்த கைது நடவடிக்கையை எடுக்க சிபிஐ முயன்றது.

CBI vs Mamata Banerjee: Chandrababu Naidu is right now speaking with all opposition leaders

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா போலீஸ் சிபிஐ அதிகாரிகளை கைது செய்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

தற்போது சிபிஐ மாநில அரசின் அனுமதி இல்லாமல் கொல்கத்தா கமிஷனரை கைது செய்ய முயன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்ணா நடத்தி வருகிறார்.

இதையடுத்து தற்போது பல கட்சித் தலைவர்கள் மமதா பானர்ஜிக்கு போன் செய்து பேசி வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மேலும் ஓமர் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், மாயாவதி, சரத்பவார் ஆகியோரும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் தற்போது மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும், சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர்களுடன் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. நாளை இவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. இதை முன்னிட்டே இவர்கள் எல்லோரும் இன்று ஆலோசனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல் பாஜக இதை எப்படி கையாளும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

English summary
CBI vs Mamata Banerjee: Andhra Pradesh Chief Minister N. Chandrababu Naidu is right now speaking with all opposition leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X