கடுமையாக உயர்ந்த அரிசி விலை.. அடுத்த வாரம் வருகிறது 'பாரத் அரிசி'! நேரடியாக களமிறங்கிய மத்திய அரசு
டெல்லி: நாடு முழுவதும் அரிசியின் சில்லறை விற்பனை விலை 15% அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் மானிய விலையில் 'பாரத் அரிசியை' மத்திய அரசு விற்பனை செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், சாமானிய மக்களின் வாழ்வாதாரம் இந்த வேகத்தில் வளரவில்லை. குறைவான ஊதியம், நாளுக்கு நாள் குறைந்து வரும் வேலை வாய்ப்பு, நிரந்தரமில்லாத வேலைகள் போன்றவை காரணமாக சாமானிய மக்களால் இந்த விலைவாசி உயர்வுக்கு ஈடுகட்ட முடியவில்லை. எனவே இம்மக்களுக்காக மத்திய அரசு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

ஏற்கெனவே பாரத் ஆட்டா (கோதுமை மாவு) கிலோ ரூ.27.50, பாரத் தால் (பருப்பு வகைகள்) கிலோ ரூ.60 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக 'பாரத் அரிசி' விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NCCF), கேந்திரிய பந்தர் விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலமாக இது விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்திய அளவில் அரிசியின் சராசரி விலை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ள காரணத்தால் 'பாரத் அரிசி’யை மத்திய அரசு விற்பனைக்கு கொண்டுவந்திருக்கிறது. கிலோ ரூ.29க்கு 5 மற்றும் 10 கிலோ மூட்டையில் அரிசி விற்கப்படும். அடுத்த வாரம் முதல் விற்பனை தொடங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த அரிசியை ஆன்லைன் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
கூட்டுறவு சங்கங்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சம் டன் அரிசியை சில்லறை சந்தையில் விற்பனை செய்ய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சமீபத்தில் பாசுமதி அல்லாத அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து தற்போது மானிய விலையில் பாரத் அரிசி விற்பனையை தொடங்குவதாக அறிவித்திருக்கிறது.
அதேபோல அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பதப்படுத்துபவர்கள் / மில்லர்கள், வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பெரிய சங்கிலி சில்லறை விற்பனையாளர்கள், தங்கள் அரிசி கையிருப்பு குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications