மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்ட கர்நாடகா.. பரிசீலனையில் இருந்து நீக்கிய மத்திய அரசு!
டெல்லி: மேகதாதுவில் அணை கட்டுவதற்காக கர்நாடகா அரசு விண்ணப்பத்திருந்த சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து மத்திய அரசு நீக்கியுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மாநில மக்களின் குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாக கர்நாடக அரசு கூறுகிறது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைப்படி காவிரி நதி பாய்ந்து ஓடும் மாநில அரசுகளின் ஒப்புதலை பெறாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை உட்பட எந்தவித கட்டுமான நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. அதேபோல் தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைகட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்தது. இது தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுத்தினார். அதில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க கூடாது என்று வலியுறுத்தியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்து மனு அளிக்க உள்ளனர். தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான இந்தக் குழுவில், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், மதிமுக சார்பில் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்தநிலையில் மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுசூழல் அனுமதி கோரும் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து மத்திய சுற்றுச்சூழல் துரை நீக்கியுள்ளது. காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 20ம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தது. அது, அதே ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் நிபுணர்கள் மதிப்பீட்டு குழு பரிசீலனை செய்தது.
அதில் இரு மாநிலங்கள் இடையே சுமூகமான சூழல் ஏற்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய முடியும் என மதிப்பீட்டு குழு முடிவு செய்தது. தொடர்ந்து மேகதாது அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை நீர்வளத்துறை அமைச்சகமு, காவிரி மேலாண்மை ஆணையமும் இ
றுதி செய்தால் மட்டுமே சுற்றுச்சுழல் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications