டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'டூல்கிட்' சர்ச்சை.. மத்திய அரசை வெறுப்பேற்றிய ஒரு வார்த்தை.. டுவிட்டருக்கு எதிராக மீண்டும் ஆவேசம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு எதிர்க்கட்சிகள் இடையே டூல்கிட் சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. டுவிட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை போட்டு தாக்கி வருகிறது. தினமும் 3,00,000-க்கும் அதிகமான பாதிப்புகளும், 3,000-க்கு மேற்பட்ட உயிரிழப்புகளும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

காஷ்மீரில்..120 வயதில் தடுப்பூசி போட்டு ..கிராமத்தை ஊக்கப்படுத்திய பாட்டி..ராணுவ தளபதி கவுரவித்தார்!காஷ்மீரில்..120 வயதில் தடுப்பூசி போட்டு ..கிராமத்தை ஊக்கப்படுத்திய பாட்டி..ராணுவ தளபதி கவுரவித்தார்!

இந்தியாவில் கொரோனா தொற்று இந்தளவுக்கு வீரியமாக பரவ பிரதமர் மோடியின் தவறான நிர்வாகமும் மெத்தனமே காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

டூல்கிட் சர்ச்சை

டூல்கிட் சர்ச்சை

ராகுல் காந்தி, சோனியா காந்தி தொடந்து மோடியையும், மத்திய அரசையும் வசைபாடி வருகின்றனர். இதற்கிடையே பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, 'கொரோனா பாதிப்பைப் பயன்படுத்தி மத்திய அரசு, பிரதமர் மோடியின் புகழைக் கெடுக்க காங்கிரஸ் தனியாகவே டூல்கிட்-ஐ உருவாக்கி உள்ளது. 'சூப்பர் ஸ்ப்ரெட்டர் கும்பமேளா' போன்ற வாசகத்தை கட்சியினர் பயன்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளது' என்று குற்றம் சாட்டி இருந்தார்.

4 பேர் மீது வழக்குப்பதிவு

4 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த 'டூல்கிட்' விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர்கள் - காங்கிரஸ் தலைவர்களிடையே சமூக வலைதளங்களில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே காங்கிரஸ் மீது பொய்யான தகவல் பரப்புவதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் செயலாளர் ஜஸ்வந்த் குர்ஜார்ராஜஸ்தான் ஜெய்ப்பூர் நகர போலீஸ் நிலையத்தில் பாஜகவின் ஜே.பி.நட்டா, ஸ்மிருதி இரானி, பி.எல்.சந்தோஷ், சம்பித் பத்ரா ஆகிய 4 பேருக்கு எதிராக புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

 கையாளப்பட்ட மீடியா குறிச்சொல்

கையாளப்பட்ட மீடியா குறிச்சொல்

மேலும், காங்கிரசுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பும் சம்பித் பத்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்று டுவிட்டருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியது. இந்த நிலையில் அரசுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்ட காங்கிரஸ் தலைவர்களின் டூல்கிட்-க்கு கையாளப்பட்ட மீடியா(இந்த கருத்து செல்லத்தக்கது) என்ற குறிச்சொல்லை டுவிட்டர் பயன்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கண்டனம்

மத்திய அரசு கண்டனம்

டுவிட்டரின் இந்த செயலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டுவிட்டருக்கு ஒரு எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் அதில் '' கொரோனா தொற்றுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கையை சிறுமைப்படுத்தவும், இந்திய அரசை அவமதித்தும், உலக அளவில் இத்திய அரசின் மதிப்புகளை குறைக்கும் வகையிலும் வெளியிடப்பட்ட டூல்கிட்டுக்கு கையாளுதல் மீடியா என்று குறிப்பிக்கப்பட்டுள்ளது.

அகற்றணும்

அகற்றணும்

இதனை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த விவகாரம் சட்ட அமலாக்க நிறுவனம் முன் நிலுவையில் இருப்பதால் டூல்கிட்டின் உண்மைத்தன்மையை டுவிட்டர் தீமானிக்க முடியாது. அரசு அதிகாரிகள் தான் தீர்மானிக்க முடியும். எனவே இந்த கையாளுதல் மீடியா என்ற குறிச்சொல்லை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

English summary
The toolkit controversy has erupted again between the federal government and the opposition. The federal government has again condemned Twitter
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X