டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாரத் பயோடெக் நிறுவனத்தின் 4 கோடி கோவேக்சின் தடுப்பூசிகள் மாயமா? மத்திய அரசு விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: பாரத் பயோடெக் நிறுவனத்தின் 4 கோடி கோவேக்சின் தடுப்பூசிகள் மாயமானதாக வெளியான செய்திகள் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசி 2.1 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பாரத் பயோடெக், மத்திய அரசு அறிக்கைகள் அடிப்படையில் 6 கோடி கோவேக்சின் தடுப்பூச்சிகள் மக்களுக்கு சென்றடைந்திருக்க வேண்டும்.

கோவாக்சின் கையிருப்பு 6 கோடி டோஸ்.. மக்களுக்கு போட்டது 2 கோடி.. மற்றவை எங்கே போனது? பரபர டேட்டா கோவாக்சின் கையிருப்பு 6 கோடி டோஸ்.. மக்களுக்கு போட்டது 2 கோடி.. மற்றவை எங்கே போனது? பரபர டேட்டா

தற்போதைய புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் சுமார் 4 கோடி கோவேக்சின் தடுப்பூசிகள் எங்கே என்கிற கேள்வி எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசு நேற்று அளித்த விளக்கம்:

 கணக்கில் வராத மருந்து டோஸ்களா?

கணக்கில் வராத மருந்து டோஸ்களா?

பாரத் பயோடெக் நிறுவனத்தின் 'கணக்கில் வராத' தடுப்பு மருந்து டோஸ்கள் குறித்து சில செய்திகள் வெளியாகியுள்ளன. இவை தவறானவை மற்றும் இது குறித்த முழு தகவல்கள் இல்லாதவை ஆகும். பாரத் பயோடெக்கிடம் ஆறு கோடி டோஸ்கள் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை.

 எதிர்பார்ப்பு என்ன?

எதிர்பார்ப்பு என்ன?

1 கோடி டோஸ்களாக ஏப்ரலில் இருந்த உற்பத்தி, 2021 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 6 முதல் 7 கோடியாக அதிகரிக்கப்படும். 2021 செப்டம்பர் மாதத்தில் இது 10 கோடி டோஸ்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து, அதன் தரத்தை சோதிக்க நேரம் தேவைப்படுகிறது. ஒரே நாளில் இதன் உற்பத்தியை அதிகரித்து விநியோகித்து விட முடியாது.

 மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும்..

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும்..

2021 மே 28 காலை நிலவரப்படி, 2,76,66,860 தடுப்பு மருந்து டோஸ்களை இந்திய அரசுக்கு பாரத் பயோடெக் வழங்கியுள்ளது. இதில், 2,,20,89,880 டோஸ்கள் (வீணானவை உட்பட) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 மாநிலங்கள், தனியார் மருத்துவமனைகள்

மாநிலங்கள், தனியார் மருத்துவமனைகள்

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிடம் தற்போது 55,76,980 டோஸ்கள் உள்ளன. இதே மாதத்தில் தனியார் மருத்துவமனைகள் 13,65,760 டோஸ்கள் கோவேக்சினை பெற்றன.

 மொத்த விநியோகம்

மொத்த விநியோகம்

2021 மே மாதத்தில், கூடுதலாக 21,54,440 கோவேக்சின் டோஸ்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இதன் மூலம் மொத்த தடுப்பு மருந்து விநியோகம் 3,11,87,060 டோஸ்களை எட்டியுள்ளது. ஜூன் மாதத்தில் 90,00,000 டோஸ்கள் விநியோகிக்கப்படும் என்று தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English summary
The Centre govt said that " Bharat Biotech has supplied 2,76,66,860 vaccine doses to Govt. of India. Out of these, 2,20,89,880 doses including wastage, have been consumed by all the States/ UTs in the ongoing COVID-19 Vaccination drive."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X