'இன்று, நாளை' குடை அவசியம் மக்களே! தமிழகத்தில் வெளுக்க போகுது மழை.. இந்திய வானிலை ஆய்வு மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதும் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தும் வருகிறது. சென்னையில் இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Chance of heavy rain in Tamil Nadu today and tomorrow: India Meteorological Department

சென்னை ஓஎம்ஆர் சாலை, பெருங்குடி, துரைப்பாக்கம், தரமணி, வேளச்சேரி, பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர் மேடவாக்கம், ஓட்டியம்பாக்கம், சித்தாலப்பாக்கம், நுங்கம்பாக்கம், போரூர், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதலே பெய்து வரும் மழையால் அலுவலகம் செல்வோர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக உள்தமிழகத்தின் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு,காரைக்கால் , புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல் நாளைய தினமும் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+