Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அத்துமீறும் சீனா.. சுயலாபத்துக்காக நாட்டை சீர்குலைக்கும் பிரதமர் மோடி.. காங்கிரஸ் மேஜர் ‛அட்டாக்’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனா உடனான எல்லை பிரச்சனையில் சுயலாபத்துக்காக பிரதமர் மோடி நாட்டை சீர்குலைக்கிறார் என 5 கேள்விகளுடன் காங்கிரஸ் கட்சி அட்டாக் செய்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லை பிரச்சனை உள்ளது. லடாக், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இந்திய பகுதிகளுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு 2 ஆண்டுகள் அமைதி நிலவிய நிலையில் கடந்த 9ம் தேதிஅருணாச்சல பிரதேச எல்லையில், சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியது. இதையடுத்து இந்திய ராணுவம் சார்பில் சீனாவுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

இந்த மோதல் நடந்தது பற்றி 2 நாட்களுக்கு பிறகு தான் தகவல் வெளியானது. இந்தியாவின் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசம் செய்கிறது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கைகள் வைத்தன. இதையடுத்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். இருப்பினும் எல்லை பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து கூறி வந்த நிலையில் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் தான் நாடாளுமன்ற கூட்டமும் முடிவுக்கு வந்துள்ளது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடிக்கு 5 கேள்வி

பிரதமர் மோடிக்கு 5 கேள்வி

இதற்கிடையே தான் எல்லை பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்விகள் கேட்டு வருகிறது. அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியா-சீனா மோதல் தொடர்பாக புதிதாக 5 கேள்விகளை காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவரான ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடிக்கு எழுப்பி உள்ளார். இந்த கேள்விக்கு பதிலளிக்கும்படி பிரதமர் மோடியிடம் அவர் வலியுறுத்தி உள்ளார். அந்த கேள்விகள் வருமாறு:

முதல் கேள்வி என்ன?

முதல் கேள்வி என்ன?

சில காலத்திற்கு முன்பு ஒரு ‛Inch towards Miles' எனும் முழக்கத்தை முன்னெடுததீர்கள். ஆனால் இந்தியாவின் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான சதுரமைல் பரப்பளவில் சீனாவை சேர்ந்தவர்கள் நுழைந்துள்ளனர். உங்களது திறமையற்ற செயல்பாட்டால் நாட்டை விதிமதிப்பற்றதாக நினைக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்வீர்களா?

2வது கேள்வி

2வது கேள்வி

இந்தியாவில் உங்கள் மீதான நல்ல பிம்பத்தை கட்டமைக்க வேண்டும் என்பதற்காக சீனா உடனான எல்லை பிரச்சனையில் ராஜாங்க ரீதியிலும், உலக தலைவர்களுடன் ஆலோசனைகள் மேற்கொள்வதை புறம்தள்ளிவிட்டீர்கள். அதோடு சீன அதிபரான உங்களின் 'நண்பரான ஜி ஜின்பிங்குடன் அகமதாபாத்தில் ஊஞ்சலில் அமர்ந்த நீங்கள் சீனாவின் வூஹானில் சேர்ந்து டீ குடித்து இந்தேனேசியாவின் பாலியில் கைக்குலுக்கி நட்பு பாராட்டி வருகிறீர்கள். 2019 அக்டோபரில் ஜி ஜின்பிங்கும், நீங்களும் சென்னை விஷன் என்ற பெயரில் இந்தியா-சீனா இடையேயான உறவின் புதிய சகாப்தம் தொடக்கம் என கூறினீர்கள். ஆனால் டெப்சாங் முதல் டெம்சோக் வரை அந்த கூற்று பொய் என நிரூபணம் ஆகி உள்ளது. இதன்மூலம் நாட்டு நலனை விட உங்களின் தனிப்பட்ட பிம்பத்தை கட்டமைக்க முயற்சிப்பது என்பது தேசத்தை பாதிக்காதா?.

3வது கேள்வி

3வது கேள்வி

2015ல் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியாவுக்கு சீனா அச்சுறுத்தலாக இருக்கிறது என கருதி உங்களிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இது உண்மையா? உண்மை என்றால் தற்போது நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் எல்லை விஷயத்தில் சீனா நமக்கு அச்சத்தை ஏற்படுத்தாது என்பதை நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?

4வது கேள்வி

4வது கேள்வி

2020ல் சீனாவின் அத்துமீறிய ஊடுருவல் என்பது மிகவும் ஆச்சரியான ஒன்றாக இருந்தது. மேலும் அது நமது ஆயத்தமின்மையை காட்டியது. இந்நிலையில் தேசியவாதிகள் என கூறிக்கொள்ளும் பாஜக அரசாங்கம் ஏன் இதுபோன்ற திடீர் தாக்குதலை எதிர்கொள்கிறது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதை விட எதிர்க்கட்சிகளை தாக்கி அரசியல் செய்வதில் தான் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறதா? மேலும் சீனாவின் ஊடுருவல்களை மறைப்பது ஏன்?

5வது கேள்வி

5வது கேள்வி

இந்தியாவுக்கு முக்கிய எதிரியாக உள்ள சீனாவின் பெயரை உச்சரிக்க பிரதமர் மோடி பயப்படுகிறார் என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றன. அதாவது 2017 முதல் 2021 வரை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டர் இருந்தார். சீனாவின் பெயரை குறிப்பிடாமல் எல்லை தொடர்பான விஷயங்களை குறிப்பிட இந்தியா கேட்டு கொண்டதாக தெரிவித்ததை மேற்கொள் காட்டி வரும் நிலையில் உங்கள் மீதான உள்நாட்டு பிம்பத்தை கட்டமைக்கவும், சுயலாபத்துக்காக நாட்டின் பாதுகாப்பை ஏன் சீர்குலைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

3வது முறையாக கேள்வி

3வது முறையாக கேள்வி

முன்னதாக கடந்த 17 ம் தேதி பிரதமர் மோடியிடம் 7 கேள்விகள் கேட்கப்பட்டது. அதன்பிறகு 18 ம் தேதி 5 கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில் தான் தற்போது புதிதாக 5 கேள்விகளை காங்கிரஸ் கட்சி கேட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+