உக்ரைனுக்கு உதவும் பிரிட்டன்.. கோப்ரா வாரியர் பயிற்சிக்கு வரமாட்டோம்! அறிவித்த "ரஷ்ய நண்பன்" இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இங்கிலாந்தில் நடைபெறும் கோப்ரா வாரியர் 2022 என்ற விமானப்படை கூட்டுப் பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்காது என்று இந்தியா அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் வட்டிங்டன் நகரில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பன்னாட்டு விமான பயிற்சி நடைபெறுகிறது. அதற்கு 'கோப்ரா வாரியர்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சியில், இந்திய விமானப்படையும் பங்கேற்கும் என்றும், அதில் இலகுரக போர் விமானமான தேஜஸ் விமானங்கள் 5 அனுப்பி வைக்கப்படும் என்றும் இந்தியா தெரிவித்திருந்தது.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்த தொடங்கி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இரு நாடுகளும் தீவிரமாக போர் புரிந்துவருகின்றன. உக்ரைன் மீது போர் தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யாவைக் கண்டித்து பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார தடை விதித்துள்ளன.

விமானப் பயிற்சி

விமானப் பயிற்சி

இங்கிலாந்தில் நடைபெறும் 'கோப்ரா 2022' விமான கூட்டுப் பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. ரஷ்யா மீது இங்கிலாந்து பொருளாதர தடைகளை விதித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரிட்டன் செயல்பட்டு வரும் நிலையில், பிரிட்டனில் நடைபெறும் போர் விமானப்பயிற்சியில் பங்கேற்பது ஒரு தரப்பிற்கு ஆதரவு அளிப்பது போல இருக்கும் என்பதால் இந்தியா இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஐநா சபை

ஐநா சபை

முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த‌ வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நார்வே, அயர்லாந்து, அல்பேனியா, கேபான், மெக்சிக்கோ, பிரேசில், கானா, கென்யா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள ரஷ்யா, தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

போர் பயிற்சி

போர் பயிற்சி

'கோப்ரா வாரியர் 22' பயிற்சியில் போரில் பங்கேற்கும் நாடுகளின் விமானப்படைகள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருக்கும். இதன்மூலம் போர்த்திறனை அதிகரிக்கவும், நட்புறவை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தப் போர்ப்பயிற்சி நடத்தப்படுகிறது. இந்தியாவின் இலகுரக போர் விமானமான தேஜஸ் அதன் செயல்பாட்டுத்திறன், மற்றும் போர்த்தந்திரத்தை வெளிப்படுத்த இந்த பயிற்சி சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால், உக்ரைன் ரஷ்யா போரால் இந்தியா இதில் பங்கேற்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+