5 நாள் திகார் சிறையில் இருங்க.. கரப்பான்பூச்சி கட்சி சவ்ரவ் தாஸ் உள்பட 3 பேருக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்த முயன்றதாக கரப்பான்பூச்சி கட்சியை சேர்ந்த சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜிங்கியா ஷிண்டே ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இன்று காலையில் 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவர்களை 5 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவிடப்பட்டது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 10ம் தேதி போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு புறப்பட்டு செல்லும் வழியிலேயே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவன அபிஜித் தீப்கே, சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

cockroach-janta-party-leaders-saurav-das-ashutosh-ranka-and-ajinkya-shinde-likely-to-sent-tihar-ja

அதன்பிறகு கடந்த 11ம் தேதி 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அப்போது டெல்லி எக்ஸிக்கியூட்டிவ் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி 3 பேரும் அடுத்த ஓராண்டு வரை அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடாது எனக்கூறி ரூ.50 ஆயிரம் பாண்ட் எழுதி வாங்கி விடுவித்தார்.

இருப்பினும் கூட 2 நாட்களில் நேற்றைய தினம் சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும்ஆகியோர் தடையை மீறி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த செயல் என்பது அவர்கள் நீதிமன்றத்தில் கொடுத்த உத்தரவாதத்தை மீறும் செயலாகும்.

இதனால் தற்போது கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த சவ்ரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மட்டுமின்றி அவருடன் கைதாகி இருக்கும் அஜிங்கியா ஷிண்டே உள்ளிட்டோரை போலீசார் இன்று போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று காலையில் 3 பேரும் டெல்லி மந்திர் மார்க்கில் உள்ள மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

3 பேரையும் நீதிமன்ற காவலில் 5 நாட்கள் டெல்லி திகார் சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவிடப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் திகார் சிறைக்கு அழைத்து சென்றனர். இதுபற்றி 3 பேர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷ்ட் ஹெலா கூறுகையில், ''3 பேரும் குற்றம் செய்வார்கள் என்ற அனுமானத்தில் அடிப்படையில் அவர்களை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தருக்கு வரும்படி மக்களிடம் அழைப்பு விடுத்ததாக அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அத்தகைய அழைப்பு ஒன்றையும் விடுக்கவில்லை. அவர்கள் பிணை பத்திரத்தை மீறவில்லை. கன்னாட் பிளேஸ் தொடர்பான தனிப்புகார் இங்கு தவறாக பயன்படுத்பப்ட்டுள்ளது. இதனால் தான் அவர்கள் 3 பேரும் 5 நாட்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+