டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தானும் படுக்காம தள்ளியும் படுக்காத காங். மேலிடம்- குலாம்நபி ஆசாத் வகையறாக்கள் குட்பைக்கு காரணம்!

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைவிடாமல் ஒவ்வொரு மாநிலத்தின் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். இப்போது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து ஆளைவிட்டால் போதுமடா சாமி என வெளியேறிவிட்டார்.

காங்கிரஸ் கட்சியானது நேரு குடும்பத்து தலைமையால் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கிறது; நேரு குடும்பம் இல்லை என்றால் காங்கிரஸ் என்கிற கட்சியே இல்லை என்கிற பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இது ஒரு மாயபிம்பம்தான் என்பதை சரித்திரங்களும் அவ்வப்போது சுட்டிக்காட்டியும் நிரூபித்தும் வந்துள்ளன.

நேருவுக்குப் பின்னர் இந்திரா, காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார்.. ஆனால் அப்படி ஒன்றும் நேரு குடும்பத்து மகாராணி என்ற தெனாவெட்டுடன் அவரை காமராஜர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இயங்கவும் விடவில்லை. காங்கிரஸ் கட்சியை ஒரு குடும்பத்தின் சொத்தாக்கிவிடக் கூடாது என காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் போராடினர். இதை இந்திரா காந்தி விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் பிளவை சந்தித்தது. இந்திரா காந்தி அம்மையார் மகன் சஞ்சய் காந்தியை நம்பினார்.. இதனால் நாடு எமர்ஜென்சியை எதிர்கொண்டது; மக்கள் பேரழிவை சந்தித்தனர்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர்களின் ஒற்றுமை உருப்படியானதாக இல்லாமல் போனதால் செத்துப் போன காங்கிரஸ் உயிர்பெற்றது. இந்திரா மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தி தலையெடுத்தார்.. எல்லாம் எனக்கு தெரியும்.. எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் அதிவேகமாக செயல்பட்டார்.. அதற்கு உயிரையே விலைகொடுக்க வேண்டிய துர்பாக்கியத்தை எதிர்கொண்டார்.

இந்திரா, ராஜீவ் மறைவுக்குப் பின்னர் காங்கிரஸ் நேரு குடும்பத்தினர் அல்லாத தலைவர்கள் வசமானது. நேரு குடும்பத்தைச் சேராத காங்கிரஸ் தலைவர் ஒருவர் பிரதமரானார். ஆனால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ் மனைவி சோனியாவை காங்கிரஸ் மீண்டும் வலிய போய் ஏற்றுக் கொண்டது. அப்போதும் காங்கிரஸ் பிளவை சந்தித்தது. ஆனாலும் சோனியாவின் ஜோதிடத்தில் ஏறுமுகம்போல.. கிடைத்த கட்சிகள் அத்தனை துணை கொண்டு ஆட்சியில் கோலோச்சியது காங்கிரஸ். அறிவிக்கப்படாத நிழல் பிரதமராக வலம் வந்தார் சோனியா. அப்போதுவரைக்கும் காங்கிரஸ் ஒன்றும் மோசமாகிப் போடவில்லை.

வெடித்து சிதறும் காங்கிரஸ்.. ரொம்ப பயமா இருக்கு.. குலாம்நபி ஆசாத் விலகலால் வருந்திய உமர் அப்துல்லாவெடித்து சிதறும் காங்கிரஸ்.. ரொம்ப பயமா இருக்கு.. குலாம்நபி ஆசாத் விலகலால் வருந்திய உமர் அப்துல்லா

காங்.-ல் ராகுல் காந்தி வருகை

காங்.-ல் ராகுல் காந்தி வருகை

2013-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்சுகிறோம் என்ற பெயரில் ராகுல் காந்தியை முதலில் துணை தலைவராக்கினார்கள்.. அன்று பிடித்தது காங்கிரஸுக்கு பேனர்த்தம் என்பதுதான் இப்போது கலகக் குரல் எழுப்பி குட்பை சொல்லி இருக்கும் குலாம் நபி ஆசாத் வகையறாக்களின் குற்றச்சாட்டு. ராகுல் காந்தி தலை தூக்க ஆரம்பித்த உடன் சோனியா தனது பங்களிப்பை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டார். சோனியா ஒன்றும் இயல்பிலேயே அரசியல் வல்லுநரும் அல்ல.. அவர் தமக்கான கடமை முடிந்தது என்ற கதையாக ராகுல் தலைமையில் சுமத்தினார். ஆனால் ராகுல் காந்தியோ காங்கிரஸ் கட்சியை தன் வீட்டு கம்பெனி போல உருமாற்றத் தொடங்கினார். இதன் விளைவுதான் நம்பிக்கை தளபதியாக இருந்த ஜோதிராத்யா சிந்தியா தொடங்கி சீனியர் குலாம்நபி ஆசாத் வரை வெளியேறிவிட்டதற்கு காரணம்.
ராகுல் காந்திக்கு பாஜக எதிர்ப்பு பார்வை உள்ளது; ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு பார்வை உள்ளது. தத்துவார்த்தம் எல்லாம் சரிதான். ஆனால் ஜனநாயகத் தன்மை எதுவும் இல்லை என்பதைத்தான் சீனியர்களும் சரி இன்று கொந்தளிப்புடன் கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத்தும் சுட்டிக்காட்டுகின்றனர். குலாம்நபி ஆசாத், சோனியாவின் வலதுகரமாக இருந்தவர்; ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கான திமுகவின் ஆதரவை தக்க வைப்பதில் ஆகப் பெரும் பங்கு வகித்தவர். அவர் என்னதான் சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்துதான் கேட்டிருந்தால் என்னவாம்? என்பதுதான் இப்போதைய கேள்வி. ராகுல் காந்தியின் பிஏ கூட முடிவு எடுக்கிறார்.. அந்த அளவுக்கு காங்கிரஸ் மோசம் என்றாகிவிட்டது என்கிறார் குலாம்நபி ஆசாத். சோனியாவின் வலது, இடதுகரங்கள் எல்லாம் ராகுல் அறிவிக்கப்பட்ட தலைவராக இருந்த போதும், அறிவிக்கப்படாத தலைவராக வலம் அந்த போதும் தூக்கி கடாசி எறியப்பட்டனர். அந்த குமுறலைத்தான் கொட்டி கொட்டி குமுறுகிறார் குலாம்நபி ஆசாத்.

குலாம்நபி ஆசாத் எனும் ஜாம்பவான்

குலாம்நபி ஆசாத் எனும் ஜாம்பவான்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வராக இருந்தவர் குலாம்நபி ஆசாத். ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் அடையாளமாக திகழ்ந்தவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் இயக்கத்தில் பயணிப்பவர். காங்கிரஸிக்கும் மாநில கட்சிகளுக்கும் கூட்டணி விவகாரங்களில் இணைப்புப் பாலமாக நட்புப் பாலமாக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி 10 ஆண்டுகாலம் பஞ்சாயத்து இல்லாமல் காலத்தை நகர்த்தியது மன்மோகன்சிங் ஆட்சித் திறமையால் என்பது அல்ல.. கூட்டணி கட்சிகளின் "பிடிகளை" தம் வசம் கெட்டியாக வைத்திருந்தார் குலாம்நபி ஆசாத். குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் முகாமில் இருந்து வலுவில் வெளியே தள்ளிவிட்டது யார்? இன்று அவர் குட்பை சொல்ல காரணம் யார் என்பது காங்கிரஸை நேசிப்பவர்கள் தீவிரமாக ஆராய வேண்டிய ஒன்று.

நேரு குடும்பப் பிடிவாதம்

நேரு குடும்பப் பிடிவாதம்

சரி 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோற்றது; அப்போது தலைவர் பதவியை தூக்கி போட்டார் ராகுல் காந்தி. அப்போதே நேரு குடும்பத்தைச் சேராத ஒருவரை தலைவராக்கி காங்கிரஸ் கட்சியை மறுசீரமைத்திருக்கலாம்.. ஏனெனில் 2014,2019 லோக்சபா தேர்தல்களில் படுகேலமாக எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத மோசமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. இந்த பாடத்தில் இருந்து மீட்க நேரு குடும்பத்தை சேர்ந்த சோனியா, ராகுல், பிரியங்கா விலகி நின்று மூத்த தலைவர் ஒருவரை முன்னிறுத்தி கட்சியை மீட்டெடுக்க பாடுபட்டிருக்கலாம். ஆனால் ராகுல் பதவியை விட்டுப் போனாரா.. சோனியா இடைக்கால தலைவரானார்.. சரி எத்தனை ஆண்டுகளுக்கு இடைக்கால தலைவர்? 3 ஆண்டுகளுக்கா.. ஒரு தேசிய கட்சி.. நாட்டை ஆளப் போவதாக இன்னமும் கனவு காணும் கட்சிக்கு ஒரு தேசியத் தலைவரை கூட அறிவிக்க முடியவில்லை.. தேர்வு செய்ய முடியவில்லை என்பது மிக கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது. அதன்பின்னராவது சரி செய்திருக்க வேண்டாமா இந்த தவறை?

அடம் பிடிக்கத்தான் வேண்டுமா?

அடம் பிடிக்கத்தான் வேண்டுமா?

இதைத்தானே குலாம் நபி ஆசாத் கேட்டார்... இதனைத்தானே காங்கிரஸின் மூத்த தலைவர்கள் 23 பேரும் கூட்டாக கேட்டார்கள்.. ஆனால் ராகுல் காந்தியின் அரசியல் அறிவு, அந்த 23 பேரையும் பாஜகவின் ஏஜெண்டுகளாகப் பார்க்க வைத்தது. அதனால் அந்த 23 பேரும் சொன்ன பரிந்துரைகள், யோசனைகள் பரணுக்கு தூங்கப் போய்விட்டன. அதன் விளைவுகள்தான் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து விலகிப் போகவும் மனம் இல்லை.. இன்னொரு மூத்த தலைவர் ஒருவரை கட்சித் தலைவராக ஏற்கவும் விருப்பம் இல்லை.. இதனைத்தான் தானும் படுக்காம.. தள்ளியும் படுக்காம என கிராமத்தில் சொல்வார்கள்.. இப்படி சோ கால்ட் காங்கிரஸ் மேலிடம் அல்லது நேரு குடும்பம் அடம்பிடித்து கொண்டிருந்தால் குலாம்நபி ஆசாத்துகள் புற்றீசல்கள் போல புறப்படுவார்கள் என்பதுதான் யதார்த்தம்.. எப்போது புரியுமோ?

English summary
Here is an article on Senior leader Ghulam Nabi Azad's Quit from the Congress party with allegations against Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X